தமிழ்நாடு

திமுக அரசின் அடுத்தடுத்து ஒப்பந்தங்களால் தகவல் மையத்தின் கூடாரமாகும் சென்னை: எதிர்கால திட்டங்கள் யாவை?

உத்தேசிக்கப்பட்ட தகவல் மையக் கொள்கையின்படி நாம் ஏற்கனவே, இந்த வளர்ந்து வரும் சந்தையில் தமிழ்நாடு நல்ல நிலையில் உள்ளது.

திமுக அரசின் அடுத்தடுத்து ஒப்பந்தங்களால் தகவல் மையத்தின் கூடாரமாகும் சென்னை: எதிர்கால திட்டங்கள் யாவை?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

54 மெகா வாட்டுடன் சென்னை இந்தியாவின் தகவல் மையங்களின் கூடாரமாக வளர்ச்சியடைந்து வருகிறது என்றும் சமீபத்தில் அரசு 11 நிறுவனங்கள் செய்து கொண்ட ஒப்பந்தங்களுடன் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அது மேலும் வளர்ச்சி அடையவும் வாய்ப்பு உள்ளதாக "திஇந்து" ஆங்கில நாளேடு தனது சிறப்புச் செய்தியில் தெரிவித்துள்ளது.

இது குறித்து நேற்று முன்தினம் (20.8.2021) "திஇந்து" ஆங்கில நாளேட்டில் சங்கீதா கந்தவேல் எழுதிய சிறப்புச் செய்தியில் குறிப்பிட்டிருப்பதாவது:-

தற்போதைய ஆற்றலான 54 மெகா வாட்டுடன் சென்னை மாநகரம் தகவல் மையங்களின் கூடாரமாக உறுதியாக உயர்ந்து வருகிறது. இந்த நகரத்தினுடைய வழங்கலை (சப்ளை) 1.3 மடங்கு அடுத்த 2 ஆண்டுகளுக்குள், திட்டமிட்ட பைப் லைன் வழியாக 79 மெகா வாட்டாக உயர வாய்ப்புள்ளது. தமிழ்நாடு அரசு நிறுவனங்களை தகவல் மையத் தொழிலில் ஈடுபட வலியுறுத்தி வருகிறது. அது இதுவரை சமீப மாதங்களில் 11 நிறுவனங்களுடன் 18,827 கோடி முதலீடு செய்யும் வகையில் ஒப்பந்தங்கள் போட்டுள்ளது.

ஒரு தகவல் மையத்தை உருவாக்க பொதுவான தேவைகள் புதைக்கப்படும் தடங்கள் (கேபிள்) அவற்றை அமைப்பதற்கான இடங்கள், போதுமான மின்சார வழங்கல் மற்றும் செழிப்படையும் தகவல் தொழில்நுட்ப (ஐ.டி.) உள்கட்டமைப்பு ஆகியவை ஆகும். இவை ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ளன. உத்தேசிக்கப்பட்ட தகவல் மையக் கொள்கையின்படி நாம் ஏற்கனவே, இந்த வளர்ந்து வரும் சந்தையில் தமிழ்நாடு நல்ல நிலையில் உள்ளது. இந்த வளர்ந்து வரும் சந்தையில் ஒன்று தனது மூன்றாவது நிர்வாக இயக்குநரகம் என்று நிர்வாக இயக்குநரும், தலைமைச் செயல்பாடு மற்றும் தமிழ்நாட்டுக்கு வழிகாட்டியுமான பூஜா குல்ஸ்ஜி கூறியுள்ளார்.

அதிக உடன்படிக்கை வாய்ப்பு!

மாநில அரசு அதிகாரிகள் மற்றும் வழிகாட்டிகள் வரும் மாதங்களில் மேலும் அதிக உடன்படிக்கைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக சமிக்ஞை செய்துள்ளனர். அதற்கான பேச்சுவார்த்தைகள் பல்வேறு நிறுவனங்களுடன் நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ளனர். தற்போது சென்னை இத்துறையில் இந்தியாவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் மும்பை (199 எம்.டபிள்யு) யும், இரண்டாவது இடத்தில் பெங்களூரு (57 எம்.டபிள்யூ)வும் உள்ளன. சென்னையும் பல்வேறு பெரும் நிறுவனங்கள் இதற்கான பகுதிகளில் பெருமளவு (83 சதவிகிதம்) ஏற்கனவே கைப்பற்றியுள்ளன. கேபிடல் மார்க்கெட்டின் சீனியர் இயக்குநர் ஜெர்ரி கிங்ஸ்வி, ஜோன்ஸ்லாட்ஸ்லாசேல் ஆகியோர் சென்னை சரித்திர பூர்வமாகவே தகவல் மையங்களுக்கான கூடாரமாகத் திகழ்ந்து வருவதாகச் சுட்டிக் காட்டியுள்ளனர்.

திமுக அரசின் அடுத்தடுத்து ஒப்பந்தங்களால் தகவல் மையத்தின் கூடாரமாகும் சென்னை: எதிர்கால திட்டங்கள் யாவை?

டெலிகாம் நிறுவனங்களுக்கான கூடாரமாகவும் ஏற்கனவே இருந்து வருகிறது. "டெலிகாம் நிறுவனமான பார்த்தி ஏர்டெல் தனது துணை நிறுவனமான நெல்ஸ்ரா மூலமாக ஒரு தகவல் மையத்தை உருவாக்கியுள்ளது. அது சிறுசேரியில் அமைந்துள்ளது. அது தன்னுடைய இரண்டாவது தகவல் மையத்தையும் கட்டி வருகிறது. அதே போன்று வோடபோன் மற்றும் ரிலையன்ஸ் ஆகியவையும் தங்கள் தகவல் மையங்களை சிறுசேரியில் அமைத்துள்ளன என்றும் அவர் கூறியுள்ளார். டாடா தகவல் தொடர்பு நிறுவனம் (டி.சி.எஸ்.) வி.எஸ்.என்.எல்., எர்த் ஸ்டேடினை 2002-ல் பெற்றுள்ளது. எஸ்.டி., டெலி மீடியா 1 குளோபல் தகவல் மையம் (எஸ்.டி.டி., ஜி.டி.சி.) இந்த டி.சி.எல். சொத்தை 2016-ல் தகவல் மையம் ஒன்றை அமைப்பதற்காகப் பெற்றுள்ளது.

எஸ்.டி.டி., ஜி.பி.சி. அல்லாமல் நிப்பான் டெலி கிராப் மற்றும் டெலிபோன்(என்.டி.டி.) ஆகியவை தங்கள் தகவல் மையங்களை அமைத்துள்ளது. அவை வேலப்பன்சாவடியில் உள்ளன. அது அம்பத்தூரில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது."சிஃபி. தனது தகவல் மையத்தை தரமணியில் அமைத்துள்ளது" என்று கிங்ஸ்லி சுட்டிக்காட்டியுள்ளார்.

எதிர்காலத் திட்டங்கள்!

ஹிரமண்டனி குழு துணை அமைப்பான யோட்டா உள்கட்டமைப்பு ஒரு தகவல் மையத்தையும் சேவை வழங்கும் ஓர் உயர்தர தகவல் பூங்காவாக மேம்படுத்தி வருகிறது. அது சென்னையிலும் தனது தகவல் பூங்காவை அமைக்கும். இந்தக் குழு நிறுவனங்கள் யோட்டாவுடன் சேர்ந்து ரூ.4000 கோடி முதலீடு செய்ய உத்தேசித்துள்ள திட்டம் 8 முதல் 10 ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும். இணை நிறுவனரும் யோட்டாவின் சி.இ.ஓ.வு.மான சுனில்குப்தா 20 ஏக்கர் வளாகத்தில் தகவல் மையம் மற்றும் பூங்கா அமைக்கப்படும் என்று கூறியுள்ளார். சிங்கப் பெருமாள் - ஓரகடம் நெடுஞ்சாலையில் அது அமைக்கப்படவிருக்கிறது. அவர் மேலும் கூறுகையில், "முதல் தகவல் மையக்கட்டிடம் 350,000 சதுர அடி பரப்பளவில் 2022 டிசம்பரில் 5 எம்.டபிள்யு தகவல் தொழில்நுட்ப வசதியுடன் எங்கள் சென்னை வளாகத்தில் உருவாக்கப்படும். இந்த வசதி 2022 ஏப்ரலில்செயல்படும்"" என்று கூறியுள்ளார்.

பிரின்ஸ்டன் டிஜிட்டல் குழு தமிழ்நாடு அரசுடன் ரூ.750 கோடிக்கு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன் உண்மையான முதலீடு மிக அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எஸ்.பி.பி. - ஜி.டி.சி. இந்தியா நிறுவனத்தின் சி.இ.ஓ. சுமித் முகிஜா கூறுகையில் "நாங்கள் 2020 மேயில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம் விரிவுபடுத்தப்படும். 1,500 கேடி மூலதனத்துடன் அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளுக்குள் விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளோம். எங்கள் நிறுவனம் ஏற்கனவே கடந்த 2 ஆண்டுகளில் ரூ.1000 கோடிக்கு மேல்முதலீடு செய்துவிட்டது. அதை மேலும் விரிவுபடுத்தி கூடுதலாக 40 முதல் 60 எம்.டபிள்யு தகவல் தொழில்நுட்ப சுமையை எற்ற திட்டமிட்டுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

இவ்வாறு "தி இந்து"ஆங்கில நாளேட்டில் சிறப்புச் செய்தியில் கூறியுள்ளது.

banner

Related Stories

Related Stories