உலகம்

மீண்டும் வந்த 'எவர் கிவன்' - திக்திக் நிமிடமாக மாறிய சூயஸ் கால்வாய்: சிக்கல் இல்லாமல் தப்பி சென்ற கப்பல்!

சூயஸ் கால்வாயில் சிக்கிக் கொண்ட எவர் கிவன் கப்பல் மீண்டும் ஐந்து மாதங்களுக்குப் பிறகு வந்து சென்றது.

மீண்டும் வந்த 'எவர் கிவன்' - திக்திக் நிமிடமாக மாறிய சூயஸ் கால்வாய்: சிக்கல் இல்லாமல் தப்பி சென்ற கப்பல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

எகிப்தில் உள்ள சூயஸ் கால்வாயில் கடந்த மார்ச் 23ம் தேதி உலகிலேயே மிகப் பெரிய சரக்கு கப்பல் என சொல்லப்படும் 'எவர் கிவன்' கப்பல், கால்வாயின் குறுக்கே மாட்டிக் கொண்டது. இதனால் கப்பல் போக்குவரத்து தடைப்பட்டது.

மேலும், கப்பல் போக்கு வரத்து தடைபட்டதால், சரக்குகளை ஏற்றி வந்த பல கப்பல்கள் அப்படியே நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதனால் உலக முழுவதும் பல்லாயிரம் கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

இதனால், 'எவர் கிவன்' கப்பலை எப்படியாவது மீட்டு கப்பல் போக்குவரத்திற்கான வழியை ஏற்படுத்த வேண்டும் என நிபுணர்கள் கடும் முயற்சியில் ஈடுபட்டனர். இவர்களின் விடா முயற்சியால் ஆறு நாட்களுக்கு பிறகே 'எவர் கிவன்' கப்பல் மீட்கப்பட்டு, போக்குவரத்து சரி செய்யப்பட்டது.

இதையடுத்து அனைத்து சரக்கு கப்பல்களும் சென்றன. மேலும் 'எவர் கிவன்' கப்பலும் தனது பயணத்தைத் துவக்கியது. இந்த கடினமா போராட்டத்தில் ஒருவர் உயிரிழக்கவும் நேர்ந்தது.

மீண்டும் வந்த 'எவர் கிவன்' - திக்திக் நிமிடமாக மாறிய சூயஸ் கால்வாய்: சிக்கல் இல்லாமல் தப்பி சென்ற கப்பல்!

இப்படி உலகையே ஸ்தம்பிக்கச் செய்த 'எவர் கிவன்' கப்பல் ஐந்து மாதங்களுக்குப் பிறகு மீண்டும் நேற்று சூயஸ் கால்வாய்க்கு வந்தது. ஏற்கனவே இந்த கப்பல் பெரிய தலைவலியை ஏற்படுத்தியதால், இம்முறை கப்பல் வருவதை அறிந்த சூயஸ் கால்வாய் அதிகாரிகள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன் இருந்தனர்.

பிரிட்டனிலிருந்து சீனா நோக்கி வந்த 'எவர் கிவன்' கப்பல் இந்த முறை எந்த சிக்கலும் இல்லாமல் நிம்மதியாக சூயல் கால்வாயைக் கடந்து சென்றது. இந்த கப்பல் இது வரை 22 முறை சூயஸ் கால்வாயைக் கடந்து சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories