தமிழ்நாடு

வெளியானது பா.ஜ.க தலைவர்களின் மீதான பாலியல் புகார் பட்டியல் : வளர்ப்பு மகளையும் விட்டுவைக்காத மிருகங்கள் ?

பா.ஜ.கவின் பொதுச் செயலாளராக இருந்த கே.டி. ராகவன் குறித்த ஆபாச வீடியோ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வெளியானது பா.ஜ.க தலைவர்களின் மீதான பாலியல் புகார் பட்டியல் : வளர்ப்பு மகளையும் விட்டுவைக்காத மிருகங்கள் ?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.கவினர் மீது பாலியல் புகார்கள் எழுந்து வருவது புதிதல்ல. குறிப்பாக, பா.ஜ.க ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றச்செயலில் அதிகம் ஈடுபடுவதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன.

அதுமட்டுமல்லாது பெண்கள் விஷயத்தில் நாடுமுழுவதுமே பா.ஜ.கவினர் ஒரேமாதிரியாக இருப்பதாகவும் விமர்சனம் எழுந்துள்ளது. குறிப்பாக, பா.ஜ.கவில் பணியாற்றும் பெண்களுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவிவருவதாக பா.ஜ.கவில் உள்ள பெண்களே தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், பாலியல் புகார்களில் தமிழ்நாடு பா.ஜ.க தலைவர்களும் விதிவிலக்கல்ல என்பது போல தற்போது பா.ஜ.கவின் மாநிலச் செயலாளர் மீது பாலியல் புகார் ஒன்று பூதாகரமாகியுள்ளது. இதனால் இணையத்தில் பலரும் பா.ஜ.க தலைவர்களை வார்த்தைகளால் வறுத்தெடுத்து வருகின்றனர். மேலும் இதற்கு முன்பு பாலியல் புகாரில் சிக்கிய பா.ஜ.க தலைவர்களின் விவகாரங்களையும் பகிர்ந்து தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

வெளியானது பா.ஜ.க தலைவர்களின் மீதான பாலியல் புகார் பட்டியல் : வளர்ப்பு மகளையும் விட்டுவைக்காத மிருகங்கள் ?

அந்தவகையில், பா.ஜ.க தலைவர் மீது குவிந்த பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்த புகார் பட்டியல் பின்வருமாறு :

கடந்த 2012ம் ஆண்டு கர்நாடக சட்டப் பேரவையில் பா.ஜ.க அமைச்சர்கள் 3 பேர் சட்டப்பேரவையில் ஆபாசப் படம் பார்த்ததை நிருபர்கள் படம் பிடித்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பினர். அது பெரும் சர்ச்சையான பிறகு அமைச்சர்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

அதேபோல் நாட்டையே உலுக்கிய உத்தரப் பிரதேசம், உன்னாவ் சம்பவம். உத்தரப் பிரதேசம் பங்கர்மாவ் தொகுதி பா.ஜ.க எம்.எல்.ஏ குல்தீப் சிங்கும் மற்றும் அவரின் சகோதரரும் 17 வயது இளம் பெண்ணை 2017 ஜூன் மாதம் பாலியல் வன்புணர்வு செய்தனர்.

அதை வெளியே சொன்ன குற்றத்திற்காக அவரின் தந்தையைக் காவல் நிலையத்தில் வைத்து 2018 ஏப்ரல் 3ம் தேதி கொலை செய்தனர். குல்தீப் சிங்கின் சாதி செல்வாக்கிற்கு அஞ்சி, மாநில முதல்வர் நடவடிக்கை எடுக்காமல் இருந்த நிலையில், ஏப்ரல் 14, 2018ல் மத்திய புலனாய்வுப் பிரிவு போலிஸார் குல்தீப் சிங்கை கைது செய்தனர்.

அதனைத் தொடர்ந்து உச்சகட்டமாக, காஷ்மீர் மாநிலத்தில் 2018 ஜனவரி 10ம் தேதி, 8 வயது சிறுமி ஆசிஃபா-வை 8 பேர் கொண்ட இந்துத்துவ கும்பல் கடத்தி, மூன்று நாட்கள் தொடர்ச்சியாக கோவிலுக்குள் வைத்து பாலியல் வன்புணர்வு செய்து கொடூரமாக கொலை செய்தது.

வெளியானது பா.ஜ.க தலைவர்களின் மீதான பாலியல் புகார் பட்டியல் : வளர்ப்பு மகளையும் விட்டுவைக்காத மிருகங்கள் ?

இந்த குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என நடைபெற்ற போராட்டத்தில் பா.ஜ.கவைச் சேர்ந்த வனத்துறை அமைச்சர் லால்சிங் மற்றும் தொழிற்துறை அமைச்சர் சந்தர் பர்கஷ் கங்கா போன்றோரும் கலந்துகொண்டனர். இந்த பிரச்சினையில் குற்றவாளிகளுக்கு ஆதரவாகப் போராட்டம் செய்த பா.ஜ.க அமைச்சர்கள் பதவி விலகியுள்ளனர்.

அதேபோல், கடந்த 2017ம் ஆண்டு பா.ஜ.கவின் திருப்பூர் வடக்கு மாவட்ட துணைத் தலைவராக இருந்த முத்து என்கின்ற மாரிமுத்து, தகாத உறவு விவகாரத்தால் தற்கொலை செய்துக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டு ஏப்ரல் 22 தேதி திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை சென்ற தொடர்வண்டியில் 9 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் செய்ததாக பா.ஜ.க பிரமுகர் பிரேம் ஆனந்த் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இவர் 2006ம் ஆண்டு ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளராக போட்டியிட்டவர்.

சென்னை மூலக்கடையைச் சேர்ந்த ஒருவர், அதே பகுதியில் வசிக்கும் பா.ஜ.கவை சேர்ந்த வழக்கறிஞர் பார்த்தசாரதி எனது மகள் மற்றும் மனைவிக்கு தொடர்ச்சியாக பாலியல் தொந்தரவு கொடுத்து வருகிறார் என பாலியல் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

வெளியானது பா.ஜ.க தலைவர்களின் மீதான பாலியல் புகார் பட்டியல் : வளர்ப்பு மகளையும் விட்டுவைக்காத மிருகங்கள் ?

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியைச் சேந்தவர் பாரதி. இவர் பா.ஜ.கவில் நகர பொறுப்பில் உள்ளார். இவர் தனது வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2021ம் ஆண்டு மே மாதம் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்தவர் ராஜ். பா.ஜ.க பிரமுகரான இவர், தனது வீட்டின் அருகே குடியிருந்து வரும் 17 வயது மாணவியிடம் பழகி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வழக்கில் 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் போக்ஸோ சட்டத்தில் கைது செய்துசெய்யப்பட்டுள்ளார். அதேபோல், விழுப்புரம் மாவட்ட பா.ஜ.க தலைவர் வி.ஏ.டி. கலிவரதன் மீது பா.ஜ.கவை சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில் தற்போது கே.டி.ராகவன் வீடியோ வந்துள்ளது. சமீபத்தில் கூட பல்வேறு புகார்கள் பா.ஜ.க தலைவர்களுக்கு எதிராக எழுந்த நிலையில், பா.ஜ.க தேசிய செயலரும், மேலிட பார்வையாளருமான சி.டி.ரவி தமிழ்நாடு பா.ஜ.க தலைவர்களை சரமாரியாக சாடியுள்ளார்.

ஊரெல்லாம் விசாகா கமிட்டி அமைத்து, பெண்கள் தொடர்பான பாலியல் புகார் மீது விசாரிக்க வலியுறுத்தி கொண்டிருக்கும் நாமே, நம்மிடையே இருப்போர் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து, விசாகா கமிட்டி அமைக்க வலியுறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டு விடும். இப்படியே போனால், கமலாலயத்துக்குள் கட்டாயம் விசாகா கமிட்டி ஒன்று அமைத்தாக வேண்டும் தான் என்று கூறியுள்ளார்.

இப்படி பா.ஜ.கவில் மேல்மட்டம் முதல் கீழ்மட்டத்தில் பணியாற்றும் நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் வரை பெரும்பாலனோர் மீது பாலியல் புகார்கள் குவிந்துள்ளது பெண்களிடம் பா.ஜ.கவினர் எந்தவிதத்தில் நடந்துக்கொள்கிறார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. எனவே பா.ஜ.கவினரிடம் இருந்து பெண்களை பாதுகாக்க உறுதியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என பெண்கள் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories