தமிழ்நாடு

“தரமற்ற குடியிருப்பை தொடர்ந்து கைகளால் குத்தினால் உடைந்து விழும் பாலம்” : அதிமுக ஆட்சியின் அடுத்த அவலம்!

ஒரத்தநாடு அருகே அ.தி.மு.க ஆட்சியில் கட்டிய பாலம் கையால் குத்தினால் உடைந்து விழும் அபாயம் உள்ளது.

“தரமற்ற குடியிருப்பை தொடர்ந்து கைகளால் குத்தினால் உடைந்து விழும் பாலம்” : அதிமுக ஆட்சியின் அடுத்த அவலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தாலுகாவிற்கு உட்பட்ட பட்டுக்கோட்டை பகுதியில் உள்ள வடபாதி பெரிய ஏரி, கீனியக் குளத்திலிருந்து சுமார் 600 ஏக்கர் நிலங்களுக்கு தண்ணீர் தேக்கி வைத்து பாசனம் செய்ப்பட்டுகிறது.

இந்நிலையில் கடந்த 2017ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சியில் சுமார் 7.5 கோடி ரூபாய் செலவில் தடுப்பனை கட்டப்பட்டது. அதனை அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனையடுத்து, அந்த தடுப்பணை பாலம் திறக்கப்பட்ட நாளில் இருந்தே ஆங்காங்கே வெடிப்பு மற்றும் கைகளால் குத்தினால் உடைந்து நொறுங்கி கொட்டும் அபாய நிலையில் இருந்தது.

இது தொடர்பாக பலமுறை மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுப்பணித் துறையிடம் பல புகார்கள் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர். உடனடியாக சம்பந்தப்பட்ட நிர்வாகம் பாலத்தை ஆய்வு செய்து ஒப்பந்தக்காரர் மற்றும் துணை போன அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும் இனி வரும் பருவ மழைக் காலங்களில் பாலத்தின் வழியாக தண்ணீர் சென்றால் பாலம் உடைக்கப்பட்டு பெருமளவில் சேதம் ஏற்படும் என அப்பகுதி பொதுமக்கள் அச்சத்துடன் தெரிவிக்கின்றனர்.

banner

Related Stories

Related Stories