தமிழ்நாடு

அனைத்து மாவட்டங்களிலும் இனி 24 மணி நேரமும் தடுப்பூசி போடலாம்... அசத்தல் திட்டத்தை தொடங்கிவைத்த அமைச்சர்!

தமிழ்நாட்டில் முதன்முறையாக 24 மணி நேரம் இயங்கும் தடுப்பூசி மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா‌.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

அனைத்து மாவட்டங்களிலும் இனி 24 மணி நேரமும் தடுப்பூசி போடலாம்... அசத்தல் திட்டத்தை தொடங்கிவைத்த அமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ் வளாகத்தில் தமிழ்நாட்டில் முதன்முறையாக 24 மணி நேரம் இயங்கும் தடுப்பூசி மையத்தை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா‌.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

மேலும் அமெரிக்கா வாழ் தமிழர்கள் அறக்கட்டளை சார்பில் 2 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முன்னிலையில் தமிழக சுகாதாரத்துறைக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்விற்கு பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழ்நாட்டில் முதன்முறையாக புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும், அரியலூர் மாவட்டத்தில் அனைத்து கர்ப்பிணிப் பெண்களுக்கும் 100சதவீதம் தடுப்பூசிசெலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 60க்கும் மேற்பட்ட கிராமங்களில் 100% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் சென்னையில் உள்ள 80 வயதிற்கு மேற்பட்டோருக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி போடும் பணி தொடங்க உள்ளது.

மேலும் நாளை மறுநாள் முதல் சென்னையில் இருக்கும் அனைத்து அரசு பொது மருத்துவமனைகளிலும் 24 மணி நேரமும் செயல்படும் தடுப்பூசி மையம் திட்டம் தொடங்கப்பட உள்ளது.

அதைத்தொடர்ந்து, 37 மாவட்டங்களிலும் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவக்கல்லூரி இல்லாத மாவட்டங்களில் மாவட்ட மருத்துவமனைகளிலும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories