தமிழ்நாடு

“பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து பேசுவோர் ஆப்கானுக்கு செல்லலாம்” : பா.ஜ.க எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!

குறைந்த விலையில் பெட்ரோல் வேண்டும் என்பவர் ஆப்கானிஸ்தான் நாட்டிற்குச் செல்லலாம் என்று பீகார் மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ ஹரி பூஷன் தாக்கூர் பச்சால் சர்ச்சைக்குறிய வகையில் பேசியுள்ளார்.

“பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து பேசுவோர் ஆப்கானுக்கு செல்லலாம்” : பா.ஜ.க எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

அண்டை நாடுகளான பாகிஸ்தானில் ஒரு லிட்டர் பெட்ரோல் 51 ரூபாய்க்கும், இலங்கையில் 59 ரூபாய்க்கும் விற்கப்படும் நிலையில், இந்தியாவிலோ 100 ரூபாயைத் தாண்டி, 109 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. டீசல் விலையும் 100 ரூபாயைத் தாண்டி விட்டது.

இந்த கட்டுக்கடங்காத விலை உயர்வை ஏற்க முடியாது என்று, இடதுசாரிகள், காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகின்றன. பெட்ரோல் - டீசல் விலையில் சுமார் 60 சதவிகிதம் அளவிற்கு உள்ள கலால் வரியைகுறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றன.

ஆனால், மோடி அரசு அதனை கேட்பதாக இல்லை. இந்நிலையில்தான், பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறித்து, குறைந்த விலையில் பெட்ரோல் வேண்டும் என்பவர்களும், இந்தியாவில் வாழபயமாக இருக்கிறது என்பவர்களும் ஆப்கானிஸ்தான் நாட்டிற்குச் செல்லலாம் என்று பீகார் மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ ஹரி பூஷன் தாக்கூர் பச்சால் பேசியுள்ளார்.

“பெட்ரோல் விலை உயர்வை எதிர்த்து பேசுவோர் ஆப்கானுக்கு செல்லலாம்” : பா.ஜ.க எம்.எல்.ஏ சர்ச்சை பேச்சு!

நேற்றைய தினம் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க எம்.எல்.ஏ ஹரி பூஷன் தாக்கூர் பச்சால், “ஆப்கானிஸ்தான் போரால் இந்தியாவுக்கு எந்த பாதிப்பும் கிடையாது. ஆப்கனில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படுவது போல், வேறு எங்கும் பாதுகாப்பு அளிக்கப்படுவது இல்லை.

இந்தியாவில் வாழ அச்சப்படுவோர்கள், தாராளமாக ஆப்கானிஸ்தானுக்கு செல்லலாம். அங்கு பெட்ரோல், டீசல் விலை மிகவும் குறைவு. அங்கு சென்றால்தான் இந்தியாவின் அருமை தெரியவரும். காடுகளுக்குக் கூட இங்கு சட்டத் திட்டங்கள் உள்ளன. ஆனால் ஆப்கானிஸ்தானில் எந்த சட்டத் திட்டங்களும் இல்லை. அநீதி காரணமாகவே ஆப்கானிஸ்தான் பிளவுபட்டது” என்று ஹரி பூஷன் தாக்கூர் கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories