தமிழ்நாடு

"சமூக நீதியை சீர்குலைக்க அவதூறு பரப்புகின்றனர்; இது உண்மையில்லை” : தெளிவுபடுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்!

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தை சீர்குலைக்க முயற்சி நடப்பதாக முதலமைச்ச மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

"சமூக நீதியை சீர்குலைக்க அவதூறு பரப்புகின்றனர்; இது உண்மையில்லை” : தெளிவுபடுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டத்தை சீர்குலைக்க முயற்சி நடப்பதாக முதலமைச்ச மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

‘அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ திட்டத்தின் கீழ் அர்ச்சகர் பயிற்சி பெற்ற பல்வேறு சாதிகளைச் சேர்ந்த 58 பேரை அர்ச்சகர்களாக நியமனம் செய்து அதற்கான ஆணையை சமீபத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

இத்திட்டம் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், புதிய அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டதால், ஏற்கெனவே பணியில் இருந்த அர்ச்சகர்கள் வெளியேற்றப்படுவதாக சமூக வலைத்தளங்களில் சில அவதூறு பரப்பி வந்தனர்.

இதுதொடர்பாக இன்று சட்டப்பேரவையில் விளக்கமளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டுக் கோயில்களில் ஏற்கெனவே பணியிலுள்ள அர்ச்சகர்கள் யாரும் பணியிலிருந்து நீக்கப்படவில்லை.

‘அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்’ திட்டத்தை சீர்குலைக்க சிலர் இவ்வாறு அவதூறு பரப்பி வருகின்றனர். சமூக நீதியைப் பாழ்படுத்தும் முயற்சியில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

முத்தமிழறிஞர் கலைஞர் கொண்டுவந்த சட்டம் நடைமுறைக்கு வராமல் இருந்தது. அதை தற்போது நடைமுறைக்குக் கொண்டு வந்துள்ளோம்.” என விளக்கம் அளித்தார்.

banner

Related Stories

Related Stories