தமிழ்நாடு

''இரண்டு கேன்களில் பெட்ரோல்...'' : திருமண விழாவில் நடிகர் மயில்சாமி செய்த அதிர்ச்சி சம்பவம்!

திருமண விழா ஒன்றில் நடிகர் மயில்சாமி இரண்டு பெட்ரோல் கேன்களை எடுத்து வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

''இரண்டு கேன்களில் பெட்ரோல்...'' : திருமண விழாவில் நடிகர் மயில்சாமி செய்த அதிர்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

தமிழ் திரையுலகில் பல்வேறு படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் மயில்சாமி. இவர், அண்மையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, மணமக்களுக்கு பெட்ரோலை பரிசாக அளித்துள்ளார்.

பெட்ரோல் விலை உயர்வுக்கு காரணமான ஒன்றிய அரசை கண்டிக்கும் விதமாக அவர் இவ்வாறு செய்துள்ளார். இது திருமணத்துக்கு வந்திருந்தவர்களின் கவனத்தை ஈர்த்தது. மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

''இரண்டு கேன்களில் பெட்ரோல்...'' : திருமண விழாவில் நடிகர் மயில்சாமி செய்த அதிர்ச்சி சம்பவம்!

இதுகுறித்து நடிகர் மயில்சாமி கூறியதாவது: “பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு கண்டுகொள்வதில்லை. அவர்களுக்கு மக்களின் கோரிக்கையை தெரியப்படுத்துவதற்காகத் தான் இவ்வாறு செய்தேன். தமிழ்நாடு அரசு பெட்ரோல் விலையில் ரூ.3 குறைத்ததை வரவேற்கிறேன்” என அவர் கூறினார்.

banner

Related Stories

Related Stories