தமிழ்நாடு

விவசாயிகளின் நலனில் தனி அக்கறை.. 50,000 விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் வழங்க ரூ.15 கோடி ஒதுக்கீடு!

சென்னையில் மரபுசார் வேளாண்மைக்கான அருங்காட்சியகம் அமைக்கப்படும் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளின் நலனில் தனி அக்கறை.. 50,000 விவசாயிகளுக்கு வேளாண் உபகரணங்கள் வழங்க ரூ.15 கோடி ஒதுக்கீடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது வேளாண் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என மக்களுக்கு அப்போது, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்தார்.

இதையடுத்து தேர்தல் வெற்றி பெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்தே தொடர்ச்சியாக வேளாண் துறைக்குத் தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என தொடர்ந்து வலியுறுத்திவந்தார்.

இதனடிப்படையில்,இன்றைய சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசின் வோண்துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையைக் காகிதமில்லா இ பட்ஜெட்டாக அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இதன் சிறப்பம்சங்கள் வருமாறு:-

"தமிழ்நாட்டில் ஐந்து ஆண்டுகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம். 2020-2021 நிதியாண்டில் ஆலைகளுக்குக் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை ரூ.40 கோடி நிதி ஒதுக்கீடு.

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்க மின்வாரியத்திற்கு ரூ.4,508.23 கேடி நிதி ஒதுக்கீடு. முதலமைச்சரின் சூரிய சக்தி பம்ப் செட்டுகள் திட்டத்தின் கீழ் 70 % மானியத்தில் விவசாயிகள் பலன் அடைய ரூ.114.68 கோடி நிதி ஒதுக்கீடு.

கோவையில் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையம் என்ற பெயரில் வேளாண்மை தொடர்பான ஆராய்ச்சிப் பணிகளுக்கு ரூ.3 கோடி ஒதுக்கீடு.

நெல்லுக்கான கொள்முதல் விலை சாதாரண ரகத்திற்கு குவிண்டாலுக்கு ரூ.2,015, சன்ன ரகத்திற்கு குவிண்டாலுக்கு ரூ.2,060 என உயர்த்தி நிர்ணயம். பாரம்பரிய நெல் வகைகளை உற்பத்தி செய்ய நெல் ஜெயராமனின் மரபுசார் நெல் இரகங்கள் பாதுகாப்பு இயக்கம்

பனை தொடர்பான பல்வேறு தொழில்களை ஊக்குவிக்க ரூ.3 கோடியில் பனை மேம்பாட்டுத் திட்டங்கள். பயிர்க் காப்பீடு திட்டத்தில் மாநில அரசின் பங்காக ரூ.2,327 கோடி நிதி ஒதுக்கீடு.

வேளாண் உபகரணங்கள் தொகுப்பு 50 ஆயிரம் விவசாயிகளுக்கு வழங்க ரூ.15 கோடி ஒதுக்கீடு. வேளாண்மையின் மகத்துவத்தை இளைஞர்கள் அறிந்துகொள்ளச் சென்னையில் மரபுசார் வேளாண்மைக்கான அருங்காட்சியகம் அமைக்கப்படும்

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் பலாவிற்கான சிறப்பு மையம் தொடக்கம். கடலூர் மாவட்டம் வடலூரில் புதியதாக அரசு தோட்டக்கலை பூங்கா அமைக்க ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என அமைச்சர் அறிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories