தமிழ்நாடு

பதவியேற்று 99 நாளில் பெட்ரோல் மீதான வரி 3 ரூபாய் குறைப்பு... நிறைவேறிய தேர்தல் வாக்குறுதி!

தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்தபடி பெட்ரோல் விலையை குறைத்துள்ளது தி.மு.க அரசு.

பதவியேற்று 99 நாளில் பெட்ரோல் மீதான வரி 3 ரூபாய் குறைப்பு... நிறைவேறிய தேர்தல் வாக்குறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

கடந்த அ.தி.மு.க ஆட்சியின் காரணமாக தமிழ்நாடு கடும் நிதிச்சுமையில் சிக்கியுள்ள நிலையில், புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தி.மு.க அரசு மக்களின் நலன் கருதி பெட்ரோல் விலையைக் குறைத்துள்ளது.

2021 - 2022ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை சட்டமன்றத்தில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்து உரையாற்றினார்.

தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி பெட்ரோல் விலையை குறைத்துள்ளது தி.மு.க அரசு.

நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தனது பட்ஜெட் உரையில், “பெட்ரோல், டீசல் பயனாளர்களுக்கு நியாயமான நிவாரணம் வழங்கவேண்டிய பொறுப்பு ஒன்றிய அரசிடம் உள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைப்படி பெட்ரோல் மீதான வரியில் ரூ. 3 குறைக்கப்படுகிறது. உழைக்கும் வர்க்கத்திற்கும், நடுத்தர குடும்பங்களுக்கும் இந்த விலை குறைப்பு பெரும் நிவாரணமாக அமையும்.

பெட்ரோல் மீதான 3 ரூபாய் வரி குறைப்பால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ1,160 கோடி இழப்பு ஏற்படும்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories