தமிழ்நாடு

மரணத்தின் பிடியில் இருந்து தமிழ்நாட்டை மீட்டு நம்பிக்கை விளக்காக திகழ்கிறார் முதல்வர் - பீட்டர் அல்போன்ஸ்

தமிழ்நாட்டு மக்களுக்கு நம்பிக்கை விளக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திகழ்கிறார் என தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார்.

மரணத்தின் பிடியில் இருந்து தமிழ்நாட்டை மீட்டு நம்பிக்கை விளக்காக திகழ்கிறார் முதல்வர் - பீட்டர் அல்போன்ஸ்
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசின் 100 நாட்கள் ஆட்சி பொறுப்பு குறித்து கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார்.

100 நாட்கள் 5 ஆண்டுகள் தொடர வேண்டிய ஒரு ஆட்சியின் சிறிய கட்டம் என்று சொன்னாலும், தமிழ்நாடு முதலமைச்சரின் நடவடிக்கைகள் மூலம் இந்த 100 நாட்கள் ஒரு மகத்தான வெற்றி பயணங்களின் எடுத்துக்காட்டு.

இந்தியாவே வியந்து பார்க்கும் வகையில் கொரோனா என்னும் மிகப்பெரிய நோய் தொற்றை வெற்றி கண்டு, மரணத்தின் பிடியில் இருந்த தமிழ்நாட்டை மீட்டுள்ளார். கொரோனா நோய்த்தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் இடத்திற்கே சென்று, மக்களை நலம் விசாரிக்கக் கூடிய முதலமைச்சர் கிடைத்திருப்பது மக்கள் செய்த பாக்கியம்.

தமிழ்நாடு முதலமைச்சர் 24 மணி நேரமும் காலில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு தமிழ்நாட்டின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று மருத்துவ செயல்பாடுகளை குறித்து, ஓய்வில்லாமல் ஆய்வு செய்தார். அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் பத்திரிக்கைகள் மூக்கிலே விரல் வைக்கும் அளவிற்கும், ஒன்றிய அரசு, ஒன்றிய அமைச்சர்கள் செய்ய முடியாத நிர்வாக பணியின் புரட்சி செய்தவர் தமிழ்நாடு முதலமைச்சர்.

உலகம் முழுவதும் ஏற்றுக் கொண்டுள்ள பொருளாதார அறிஞர்களை தனது ஆலோசனைக் குழுவில் நியமித்தார். அரசுத் துறைகளின் அதிகாரிகள் ஒவ்வொருவரையும் தேர்ந்தெடுத்து நியமித்தது நடுநிலையாளர்களால் பாராட்ட வைத்தது. தமிழுக்கு தொண்டாற்றிய தமிழுக்கென வாழ்ந்த தலைவர்களை சமூகம் கண்டுகொள்ளாத நிலையில், அவர்களுக்கு என்று தனி அங்கீகாரம் கொடுத்து தகைசார் தமிழர்கள் பாராட்டியவர்.

சமூக நீதியின் உச்சத்தை தொட்டவர், மருத்துவ மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தவர், ஆலயங்களில் தமிழில் அர்ச்சனையை கொண்டு வந்தவர் போன்ற பல திட்டங்கள் என சொல்லி கொண்டே போகலாம். வெள்ளை அறிக்கை மூலம் தமிழ் நாட்டின் நிலைமையை நாட்டு மக்களுக்கு தெரிய வைத்துள்ளார்.

தொட்ட இடத்திலெல்லாம் ஊழல், ஏழை எளிய மக்களின் வரிப்பணம் எப்படி வீணாகி உள்ளது என்பதை வெள்ளை அறிக்கையின் மூலம் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார். தமிழ்நாட்டு மக்களுக்கு நம்பிக்கை விளக்காக தமிழ்நாடு முதலமைச்சர் திகழ்கிறார்.

1 லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதாரமாக தமிழ் நாட்டின் பொருளாதாரத்தை மாற்ற போகின்றேன் என்ற அவரது கனவு, அதை நோக்கி அவர் போடும் வெற்றி நடை பயணமும் ஏழரை கோடி தமிழ் மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றும் என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories