தமிழ்நாடு

"ரேவதி அடுத்த ஒலிம்பிக்கில் பங்கேற்க ஆகும் அனைத்து செலவையும் ஏற்கிறேன்”: உறுதியளித்த அமைச்சர் பி.மூர்த்தி

“ரேவதி மீண்டும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ஆகும் செலவை நானே ஏற்றுக்கொள்கிறேன்" என வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி உறுதியளித்தார்.

"ரேவதி அடுத்த ஒலிம்பிக்கில் பங்கேற்க ஆகும் அனைத்து செலவையும் ஏற்கிறேன்”: உறுதியளித்த அமைச்சர் பி.மூர்த்தி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மதுரையைச் சேர்ந்த தடகள வீராங்கனை ரேவதி ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றமைக்காக ரேவதி பயின்ற கல்லூரியான லேடி டோக் பெருமாட்டி கல்லூரியில் ரேவதி மற்றும் ரேவதியின் பயிற்சியாளர் கண்ணன் ஆகியோருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

இந்த விழாவில் நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், வணிகவரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் ஆகியோர் பங்கேற்றனர்.

லேடி டோக் கல்லூரி சார்பில் ரேவதி மற்றும் அவரது பயிற்சியாளர் கண்ணன் ஆகியோருக்கு தலா ரூ. 1 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. அப்போது, பயிற்சியாளர் கண்ணன் தனக்கு வழங்கப்பட்ட 1 லட்ச ரூபாய் பரிசையும் ரேவதிக்கே வழங்கினார்.

இந்த விழாவில் பேசிய வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, “தாய், தந்தையை இழந்தாலும் சாதனையை செய்திருக்கிறார் ரேவதி. ரேவதி இந்தியாவுக்கு முன் மாதிரியாக உருவெடுத்துள்ளார். ரேவதியின் சாதனையில் அவரது பாட்டி ஆரம்மாளுக்கு முக்கிய பங்குண்டு.

கிராமத்தில் பிறந்து நாட்டுக்கே பெருமை தேடித் தந்துள்ளார் ரேவதி. ரேவதியின் சாதனைகளைப் பார்த்து பல ரேவதிகள் உருவாக வேண்டும். ரேவதி மீண்டும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க ஆகும் செலவை நானே ஏற்றுக் கொள்கிறேன். ரேவதி மீண்டும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று தங்கம் வாங்குவார்" என நம்பிக்கை தெரிவித்தார்.

"ரேவதி அடுத்த ஒலிம்பிக்கில் பங்கேற்க ஆகும் அனைத்து செலவையும் ஏற்கிறேன்”: உறுதியளித்த அமைச்சர் பி.மூர்த்தி

நிதி அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், “தமிழ்நாட்டில் உள்ள பல பெண்களுக்கு இளைஞர்களுக்கு ரேவதி நம்பிக்கையை விதைத்திருக்கிறார். ரேவதி தான் தொடங்கிய இடத்திலிருந்து இன்று அடைந்திருக்க உச்சம் என்பது அசாதாரணமானது.

நம்மைப் போல மிக பெரிய மக்கள்தொகை உள்ள நாட்டில் மிக சிலரே இது இதுபோல விளையாட்டுத்துறையில் உச்சம் தொடுவது என்பது நமது சமூகத்தின் சரியான பிரதிபலிப்பு இல்லை, ஆனால் நல்வாய்ப்பாக தமிழகத்திலிருந்து ஒலிம்பிக்கில் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

நமது முதல்வர் முந்தைய அரசுகளை விட ஒலிம்பிக்கில் பங்கேற்ற வீரர்களுக்கு அதிகமான நிதி உதவி, பரிசுகள் மற்றும் அரசு வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளார்.” எனத் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories