தமிழ்நாடு

பிரதமர் மோடியின் பெயரில் புத்தகம் வெளியிடுவதாக கூறி பண மோசடி : இந்து மகா சபா தலைவர் ஜாமீன் மனு தள்ளுபடி!

பண மோசடி வழக்கில் கைதான இந்து மகா சபா தலைவர் ஸ்ரீகண்டன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பிரதமர் மோடியின் பெயரில் புத்தகம் வெளியிடுவதாக கூறி பண மோசடி : இந்து மகா சபா தலைவர் ஜாமீன் மனு தள்ளுபடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள இந்து மகா சபா அலுவலகத்தை புதுப்பிக்கவும், பிரதமர் மோடியின் பெயரில் புத்தகம் வெளியிடுவதற்ககாகவும் ஸ்ரீகண்டனுக்கு ரூபாய் 14 லட்சம் கொடுத்ததாகவும், ஆனால் அதனை திருப்பி கொடுக்காமல் மிரட்டலில் ஈடுபட்டதாக சென்னை காரப்பாக்கத்தை சேர்ந்த தொழில் அதிபர் விமல்சந்த் என்பவர் ஸ்ரீகண்டன் மீது புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் கீழ்ப்பாக்கம் போலிஸார் ஸ்ரீகண்டன் மீது ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி செய்தல், கொலை மிரட்டல் விடுத்தல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்தநிலையில், ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்து மகா சபா தலைவர் ஸ்ரீகண்டன் தாக்கல் செய்த மனுவானது நீதிபதி தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், ஸ்ரீகண்டன் மீது ஏற்கெனவே 4 வழக்குகள் உள்ளதால் அவருக்கு ஜாமின் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார்.

இதை ஏற்று ஸ்ரீகண்டனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி, இந்து மகா சபா என்பது ஒரு காலத்தில் தேவாரம் மற்றும் திருவாசகம் போன்ற பாசுரங்களை பாடுவதற்காக அமைக்கபட்டதாக இருந்தது எனவும், தற்போது இந்து மகா சபாக்கள் விநாயகர் சதுர்த்திக்கு பணம் வசூல் செய்வதற்காகவே உள்ளது எனவும் வேதனை தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories