தமிழ்நாடு

அ.தி.மு.க ஆட்சியில் அனைத்து டெண்டர்களில் ஊழல்.. 2வது நாளாக தொடரும் சோதனை : எஸ்.பி.வேலுமணி விரைவில் கைது?

எஸ்.பி.வேலுமணிக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க லஞ்ச ஒழிப்பு போலிஸார் முடிவு செய்துள்ளனர்.

அ.தி.மு.க ஆட்சியில் அனைத்து டெண்டர்களில் ஊழல்.. 2வது நாளாக தொடரும் சோதனை : எஸ்.பி.வேலுமணி விரைவில் கைது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அ.தி.மு.க ஆட்சியின்போது உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்தாக புகார் எழுந்ததைத் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்றும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் அவருக்குச் சொந்தமான 60 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, அவரது சகோதரர் அன்பரசன் உட்பட 17 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் ஊழல் வழக்குப் பதிவு செய்துள்ளனர். அதேபோல், அரசு ஒப்பந்தங்களைத் தனது உறவினர்கள், நண்பர்களுக்கு வழங்கி முறைகேட்டில் ஈடுபட்டதாக எழுந்த புகாரிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து எஸ்.பி.வேலுமணிக்கு சொந்தமான இடங்களில் நேற்று முதல் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகிறார்கள். மேலும் கோவையில் உள்ள அவரது வீட்டில் முக்கிய ஆவனங்களை போலிஸார் கைப்பற்றியுள்ளனர். அவரது வீட்டில் இருந்த லாக்கருக்கான சாவி ஒன்றை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ஆவனங்கள் குறித்தும் ஆய்வு செய்ய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். அதேபோல், டெண்டர் முறைகேடு வழக்கில் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்துள்ளது.

அதேபோல், சொத்துக்குவிப்பில் எஸ்.பி.வேலுமணி ஈடுபட்டது தெரியவந்தால் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யவும் போலிஸார் திட்டமிட்டுள்ளனர். இதானல் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விரைவில் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories