தமிழ்நாடு

நாளை வெள்ளை அறிக்கை வெளியிடுகிறார் நிதி அமைச்சர் PTR : அதில் இடம் பெறுவன யாவை?

தமிழ்நாடு அரசின் நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கையை நாளை நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளியிடவுள்ளார்.

நாளை வெள்ளை அறிக்கை வெளியிடுகிறார் நிதி அமைச்சர் PTR : அதில் இடம் பெறுவன யாவை?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழக நிதிநிலை தொடர்பான வெள்ளை அறிக்கை நாளை (ஆகஸ்ட் 9) 120 பக்கங்கள் கொண்ட அறிக்கையாக வெளியிடப்பட உள்ளது.

வெள்ளை அறிக்கை என்றால் என்ன? அதில் என்ன எதிர்பாக்கலாம் என்பது தொடர்பாக விரிவாக பார்க்கலாம்.

* வெள்ளை அறிக்கை என்பது அரசின் நிதி நிலையையும், எதிர்கால திட்டங்களையும் மக்களுக்கு முன்னால் வெளிப்படையாகத் தெரிவிக்கும் ஒரு அறிக்கையாகும்.

* அரசாங்கம் மட்டுமல்லாமல், நிறுவனம், அமைப்பு, கூட்டமைப்பு ஆகியவை ஒரு பிரச்சனையை சரி செய்ய எடுத்திருக்கும் முடிவுகள் மற்றும் தீர்மானங்களை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவும் வெள்ளை அறிக்கை பயன்படுகிறது.

* 9ம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ள வெள்ளை அறிக்கையில், 2011ம் ஆண்டில் இருந்த நிதி நிலையும், தற்போது உள்ள நிதி நிலையும் ஒப்பிட்டுக் காட்டப்படும்.

கடந்த 10 ஆண்டுகளில் 5 லட்சத்து 50 ஆயிரம் கோடி ரூபாயாக கடன் சுமையில் தமிழகம் இருந்துள்ளது. எனவே, இது தொடர்பான விரிவான விவரங்கள் வெள்ளை அறிக்கையில் இடம்பெறக் கூடும்.

* ஏற்கெனவே வாங்கிய சுமார் ரூ.4.85 லட்ச கோடி கடனுக்காக, ஆண்டுக்கு அரசு சுமார் 50,000 கோடி ரூபாயைக் வட்டியாகக் கட்டிவரும் நிலையில், கடன் சுமை அதிகரிப்பதன் காரணம் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்படும்.

* அதிமுக அரசு கடன்களை எதற்கு வாங்கினார்கள், எப்போது வாங்கினார்கள், அதன் பயன்பாட்டு விவரங்கள் என்ன என்பதை இந்த வெள்ளை அறிக்கை நிச்சயமாக விளக்கும்

* கொரோனா பெருந்தொற்றால், அரசுக்கு ஏற்பட்டுள்ள கூடுதல் சுமை, அரசு செய்துள்ள செலவுகள் என்ன, கூடுதல் தொகை செலவிடப்பட்டுள்ளதா என்பது பற்றியும் வெள்ளை அறிக்கையில் குறிப்பிடப்படும்.

* தமிழக அரசின் நிதிநிலை தவிர பிற துறைகளான போக்குவரத்துத்துறை, மின்சாரத்துறை, உள்ளாட்சித்துறை, சுகாதாரத்துறை ஆகியவற்றின் நிதி நிலை பற்றிய அறிவிப்புகளும் வெள்ளை அறிக்கையில் இடம்பெறும்.

* கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக அரசு பெற்ற கடன், செலவு,வருவாய் இழப்பு ,நிதி சுமை அனைத்தும் வரும் 9 தேதி வெளியிடவுள்ள வெள்ளை அறிக்கை மூலம் வெளிச்சத்திற்கு வர உள்ளது.

banner

Related Stories

Related Stories