தமிழ்நாடு

“ராகுல் காந்திக்கு ஒரு நீதி; பாஜகவிற்கு ஒரு நீதி”: ட்விட்டர் நிறுவனத்தை கேள்விகளால் துளைத்த நெட்டிசன்கள்!

ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.

“ராகுல் காந்திக்கு ஒரு நீதி; பாஜகவிற்கு ஒரு நீதி”: ட்விட்டர் நிறுவனத்தை கேள்விகளால் துளைத்த நெட்டிசன்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கடந்த வாரம் டெல்லியில் 9 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது. இந்நிலையில் குழந்தையை இழந்த பெற்றோரை காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

மேலும் தங்களுக்கு நீதி கிடைக்க துணை இருப்பதாகவும் உறுதியளித்தார். இதனிடையே சிறுமியின் தாயுடன் பேசிய புகைப்படத்தை ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் போக்சோ விதிமுறைகளை மீறி, ராகுல் காந்தி பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்தார், பெற்றோர் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதாகக் கூறி, தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், ட்விட்டர் நிறுவனத்துக்கு கடிதம் எழுதி, ராகுல் காந்தி, போக்சோ விதிமுறைகளை மீறிவிட்டதால், ட்விட்டர் நிறுவனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது.

“ராகுல் காந்திக்கு ஒரு நீதி; பாஜகவிற்கு ஒரு நீதி”: ட்விட்டர் நிறுவனத்தை கேள்விகளால் துளைத்த நெட்டிசன்கள்!

அதனைத் தொடர்ந்து ராகுல் காந்தியின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து சிறுமியின் தாயுடன் இருந்த புகைப்படத்தை நீக்கியது. அதோடு இல்லாமல், புகைப்படம் நீக்கப்பட்டு 24 மணிநேரம் வரை ட்விட்டர் கணக்கு முடக்கப்படும் என்பதால், ராகுல் காந்தியின் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இதுகுறித்து காங்கிரஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ராகுல் காந்தியின் ட்விட்டர் கணக்கு தற்காலிகமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது. மறுசீரமைப்புக்குப்பின் மீண்டும் செயல்படும். அதுவரை ராகுல் காந்தி பிறசமூக ஊடகங்கள் வாயிலாக தொடர்பில் இருப்பார். மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பார்.ஜெய் ஹிந்த்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தியின் மீது இத்தகைய நடவடிக்கை எடுத்த ட்விட்டர் நிர்வாகம் சிஏஏ போராட்டத்தின் போது ட்விட்டர் மூலம் வன்முறையைத் தூண்டிய பா.ஜ.க நிர்வாகிகள் மீதும், போலி செய்திகளையும் அவதூறுகளையும் பரப்பு பா.ஜ.க இந்துத்வா கும்பல் மீது ட்விட்டர் நிர்வாகம் எப்போது நடவடிக்கை எடுக்கும் என பலரும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories