தமிழ்நாடு

இன்ஸ்டாகிராம் காதல்.. காதலியை நிர்வாண வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய காதலன்.. போக்சோவில் கைது!

மதுரையில் வீடியோ எடுத்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு வாலிபர்களை போலிஸார் போக்சோவில் கைது செய்துள்ளனர்.

இன்ஸ்டாகிராம் காதல்.. காதலியை நிர்வாண வீடியோ எடுத்து பணம் கேட்டு மிரட்டிய காதலன்.. போக்சோவில் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மதுரை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் வாயிலாக சிவகங்கை மாவட்டம் அல்லிநகரம் பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

பின்னர், இவர்கள் இருவரும் இன்ஸ்டாகிராமில் பேசி நட்பாக பழகிவந்துள்ளனர். இதையடுத்து ஒருகட்டத்தில் நட்பு காதலாக மாறியுள்ளது. மேலும் சந்தோஷ் குமார் மீது அளவுக்கு அதிகமான நம்பிக்கையை வைத்துள்ளார் அந்தச் சிறுமி.

இதனால் இவர்கள் அடிக்கடி தனியாகச் சந்தித்து வந்துள்ளனர். அப்போது சந்தோஷ் குமார் வீட்டில் இருவரும் தனியாக நெருக்கமாக இருந்ததை வீடியோ எடுத்துள்ளார். இதை வைத்து அவரிடம் அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்தும், பணம் கேட்டு மிரட்டியும் வந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சிறுமி இதுகுறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பிறகு அவரின் பெற்றோர் போலிஸில் புகார் கொடுத்துள்ளனர். இந்தப் புகாரின் அடிப்படையில் போலிஸார் போக்சோவில் வழக்குப் பதிவு செய்து சந்தோஷ்குமாரையும், இதற்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் ராகுல் ஆகிய இரண்டு பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

banner

Related Stories

Related Stories