தமிழ்நாடு

வரதட்சணை கொடுமையால் மன உளைச்சல்? தூக்கில் தொங்கிய இளம்பெண் : சென்னையில் நடந்த பரிதாபம்!

தாம்பரம் அருகே திருமணமான 8 மாதத்தில் இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை.

வரதட்சணை கொடுமையால் மன உளைச்சல்? தூக்கில் தொங்கிய இளம்பெண் : சென்னையில் நடந்த பரிதாபம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வரதட்சனை கொடுமையால் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக போலிசில் தந்தை புகார் அளித்ததை அடுத்து கணவரிடம் விசாரணை.

சென்னை பனையூர் பகுதியை சேர்ந்தவர் பிரமோத் (25) தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஸ்னேகா (19). இவர்களுக்கு திருமணமாகி 8 மாதங்கள் ஆன நிலையில் பிரமோத் தனது மனைவியிடம் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் கோபித்து கொண்டு சேலையூர் ரங்கநாதன் தெருவில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்க்கு கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் வந்துள்ளார். இதனையடுத்து நேற்று இரவு பிரமோத் தொலைபேசி மூலம் ஸ்னேகாவை தொடர்பு கொண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக சொல்லப்படுகிறது.

வரதட்சணை கொடுமையால் மன உளைச்சல்? தூக்கில் தொங்கிய இளம்பெண் : சென்னையில் நடந்த பரிதாபம்!

இதனால் மன உளைச்சலில் இருந்த ஸ்னேகா தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். வெகு நேரமாகியும் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த பெற்றோர் கதவை உடைத்து பார்த்த போது தூக்கில் பிணமாக தொங்கிய ஸ்னேகாவை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வரதட்சணை கொடுமையால் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக ஸ்னேகாவின் தந்தை சேலையூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை அடுத்து பிரமோத்தை கைது செய்த போலிசார் விசாரனை செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories