தமிழ்நாடு

தண்ணீர் நிறுத்தம்; பணியாளர்கள் வெளியேற்றம்.. ஸ்டெர்லைட் ஆலைக்கு மீண்டும் பூட்டு போட்டது தமிழ்நாடு அரசு !

மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் மூடப்பட்டது.

தண்ணீர் நிறுத்தம்; பணியாளர்கள் வெளியேற்றம்.. ஸ்டெர்லைட் ஆலைக்கு மீண்டும் பூட்டு போட்டது தமிழ்நாடு அரசு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை உச்சத்திலிருந்தபோது கடும் ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டது. தமிழ்நாட்டிலும் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்தது. இதைத் தொடர்ந்து ஆக்சிஜன் தேவைக்காக ஸ்டெர்லைட் ஆலையை தொடங்க உச்சநீதிமன்றம் அனுமதி கொடுத்ததன் பேரில், மருத்துவ ஆக்சிஜன் உற்பத்திக்காக மட்டும் ஆலையை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது.

ஆக்சிஜன் உற்பத்திக்கு உச்சநீதிமன்றம் அளித்த மூன்றுமாத அவகாசம் நேற்றுடன் முடிவடைந்தது. மேலும் தமிழ்நாட்டில் தற்போது மருத்து தேவைக்கான ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாததால், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை நீட்டிக்க தேவையில்லை என உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்தது.

இதையடுத்து தமிழ்நாடு அரசின் உத்தரவைத் தொடர்ந்து தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் மூடப்பட்டது. மேலும் இதில் பணியாற்றி வந்த பணியாளர்களும் வெளியேற்றப்பட்டனர். மேலும் ஆலைக்கு வழங்கப்பட்டு வந்த தண்ணீர் இன்று காலை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories