தமிழ்நாடு

ஓவிய ஆசிரியர் காணாமல்போன வழக்கில் திடீர் திருப்பம்.. கொலை செய்து ஆற்றில் புதைத்த மனைவி: போலிஸ் அதிர்ச்சி!

காஞ்சிபுரம் அருகே காணாமல் போன ஓவிய ஆசிரியர் கொலை செய்யப்பட்ட நிலையில் ஆற்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஓவிய ஆசிரியர் காணாமல்போன வழக்கில் திடீர் திருப்பம்.. கொலை செய்து ஆற்றில் புதைத்த மனைவி: போலிஸ் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூரை அடுத்த சிவபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன். இவர் சென்னையில் உள்ள தனியார் பள்ளியில் ஓவிய ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.

கொரோனா ஊரடங்கால் ஒரு வருடத்திற்கு முன்பே ஆசிரியர் அன்பழகன், மனைவி ஷோபனாவுடன் சொந்த ஊரான சிவபுரம் கிராமத்திற்குச் சென்று அங்கேயே தங்கி வந்துள்ளார். இந்நிலையில் இவரது உறவினரான தர்மராஜ், இவர்களுக்கு உதவி செய்வது போல் பழகி வந்துள்ளார்.

இந்நிலையில் ஆசிரியர் அன்பழகன் காணவில்லை என மனைவி ஷோபனாவும், உறவினர் தர்மராஜும் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

பின்னர் போலிஸாருக்கு காணாமல் போன ஓவிய ஆசிரியரின் மனைவி ஷோபனா மீது சந்தேகம் எழுந்துள்ளது. பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கூறியதைக் கேட்டு போலிஸாரே அதிர்ச்சியடைந்தனர்.

ஓவிய ஆசிரியர் அன்பழகனுக்குத் தெரியாமல் தர்மராஜும், ஷோபானாவும் ரகசியமாகக் காதலித்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில் இது அன்பழகனுக்குத் தெரியவந்துள்ளது. பிறகு தர்மராஜிடம் வீட்டிற்கு இனி வரவேண்டாம் எனக் கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த மனைவி ஷோபனா மற்றும் தர்மராஜ் இருவரும் சேர்ந்து ஆசிரியர் அன்பழகனை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர். பின்னர் தங்களின் திட்டப்படி அன்பழகன் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது மனைவி ஷோபனா, தர்மராஜ் அவரது நண்பர் விக்னேஷ் மூவரும் சேர்த்து துடிக்கத் துடிக்க அவரை கொலை செய்துள்ளனர்.

பின்னர் ஆசிரியர் அன்பழகனின் உடலை வீட்டின் அருகே உள்ள ஆற்றில் குழி தோண்டி புதைத்துள்ளனர். இதனைத் தொடர்ந்தே காவல்நிலையத்தில் கணவர் காணவில்லை என ஷோபனா புகார் தெரிவித்துள்ளார்.

விசாரணையைத் தொடர்ந்து ஆசிரியர் அன்பழகன் புதைக்கப்பட்ட இடத்திற்கு சென்ற போலிஸார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மனைவி ஷோபனா, உறவினர் தர்மராஜ், நண்பர் விக்னேஷ் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories