தமிழ்நாடு

’எனக்கு IG-ய நல்லா தெரியும்’ பாணியில் மோசடி - ரூ.99 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகி பிடிபட்டது எப்படி?

பாஜக கட்சியின் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட்ட நபர் மோசடி வழக்கில் போலீசாரால் கைது.

’எனக்கு IG-ய நல்லா தெரியும்’ பாணியில் மோசடி - ரூ.99 லட்சத்தை சுருட்டிய பாஜக நிர்வாகி பிடிபட்டது எப்படி?
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அடையாறு பகுதியில் உள்ள தர்மா பார்மஸியில் மேலாளராக இருந்து வருபவர் முகமது நூருதீன் (61). இவரது நண்பர் மூலமாக ராஜா அண்ணாமலைபுரம் போட் கிளப் பகுதியை சேர்ந்த பாஜக நிர்வாகி நாகராஜ் (31) என்பவருடன் முகமதுக்கு பழக்கம் ஏற்பட்டது.

பின்னர் நாளடைவில் தனக்கு பாஜக தலைவர்களுடன் நெருங்கிய நட்பு இருப்பதாக கூறி தொழில் பெருக்கத்திற்காக வங்கியிலிருந்து 75 கோடி ரூபாய் லோன் வாங்கி தருவதாக முகமதிடம் நாகராஜ் கூறியுள்ளார். ஆனால் அதற்கு பணம் செலவாகும் எனக்கூறி பத்திரப்பதிவிற்கு 6.5 லட்சமும், 60 லட்சம் ரூபாய் ஸ்டாம்ப் பேப்பர், 22 லட்சம் டைமண்ட் நகைகள் என மொத்தம் 92 லட்ச ரூபாயை முகமதிடம் நாகராஜ் பெற்றுள்ளார்.

இதனையடுத்து நீண்ட நாட்களாக லோன் வாங்கி தராமலும், கொடுத்த பணத்தை திருப்பி தராமலும் நாகராஜ் ஏமாற்றி வந்ததால் முகமது சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது செக் ஒன்றை வழங்கினார். அந்த செக்கை வங்கியில் செலுத்தினால் குறிப்பிட்ட வங்கி கணக்கில் பணமில்லை என தெரிய வந்ததால் முகமது கடந்த 2019ம் ஆண்டு சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் நாகராஜ் மீது புகார் அளித்தார்.

புகாரின் பேரில் போலீசார் மோசடி உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் நாகராஜ் மற்றும் அவரது தந்தை விஷ்னு சாகர்(73), சகோதரி பூர்ணிமா ஆகியோர் தலைமறைவாகி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நாகராஜை நேற்று போலீசார் கைது செய்தனர்.

இவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் நாகராஜ் கடந்த 2016 ஆம் ஆண்டு பாஜக சார்பில் ராணிப்பேட்டை தொகுதியின் சட்டமன்ற வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தது தெரியவந்தது. நாகராஜ் ஏற்கனவே முன்னாள் ஆளுநர் ரோசய்யாவின் பேரன் எனக்கூறி தொழிலதிபர் பெவினா என்பவரிடம் ஈ.சி.ஆர் பகுதியில் குறைந்த விலையில் பங்களா வாங்கி தருவதாக கூறி ஒரு கோடிக்கும் அதிகமாக மோசடி செய்த வழக்கில் கடந்த 2017 ஆம் ஆண்டு மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தது தெரியவந்தது.

இதே போல் தான் பாஜக தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாக கூறி முகமதிடமும் ஏமாற்றியது தெரியவந்தது. மேலும் நாகராஜின் தந்தை, மகள் ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட நாகராஜ் இதே போல் வேறு நபர்களிடமும் மோசடியில் ஈடுபட்டுள்ளாரா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories