தமிழ்நாடு

வீடு வாடகைக்கு எடுத்து சூதாட்டம் நடத்திய பா.ஜ.க பிரமுகர்: தொடர் குற்றங்களில் சிக்கும் பா.ஜ.க நிர்வாகிகள்!

பணம் வைத்து சூதாடிய பா.ஜ.க பிரமுகர் உள்ளிட்ட 8 பேரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடு வாடகைக்கு எடுத்து சூதாட்டம் நடத்திய பா.ஜ.க பிரமுகர்: தொடர் குற்றங்களில் சிக்கும் பா.ஜ.க நிர்வாகிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னை எம்.ஜி.ஆர் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களை போலிஸார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த நிலையில், எம்.ஜி.ஆர் நகர் பெரியார் தெருவில் உள்ள ஒரு வீட்டில் சூதாட்டம் நடப்பதாக போலிஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலிஸார் அங்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது ஒரு அறையில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. உடனடியாக சூதாட்டத்தில் ஈடுபட்ட எம்.ஜி.ஆர்.நகர், சூளைப்பள்ளத்தைச் சேர்ந்த விஜயகுமார், பாண்டியராஜன், ரவி, லோகநாதன் உள்ளிட்ட எட்டு பேரை கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து 40 ஆயிரம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர். விசாரணையில், பைனான்ஸ் அலுவலகத்திற்காக வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதனை எம்.ஜி.ஆர்.நகர் பா.ஜ.க பிரமுகரான விஜயகுமார் வீடு வாடகைக்கு எடுத்து, கட்டணம் வசூலித்து சூதாட்டம் நடத்தியது தெரியவந்தது. தொடர்ச்சியாக பல்வேறு குற்றவழக்குகளில் பா.ஜ.க.வினர் சிக்கி வருவது மக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories