தமிழ்நாடு

“இலவச பேருந்து பயணம்: மகளிர் பயணிகளை முறையாக நடத்த வேண்டும்”: ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கு அறிவுறுத்தல்!

அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கும் மகளிர் பயணிகளை முறையாக நடத்த வேண்டும் - ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கு சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவுரை வழங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

“இலவச பேருந்து பயணம்: மகளிர் பயணிகளை முறையாக நடத்த வேண்டும்”: ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கு அறிவுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாட்டு முதலமைச்சராக கடந்த மே மாதம் 7ம் தேதி பொறுப்பேற்ற மு.க.ஸ்டாலின், பொறுப்பேற்ற அன்றைய தினமே நகரப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டார்.

அந்த வகையில், தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றிருக்கும் அறிவிப்பினை செயலாக்கும் வகையில், தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டார்.

அதன் படி கடந்த மே மாதம் 8ம் தேதி முதல் நகர பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர். பெண்களை தொடர்ந்து திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவரது உதவியாளர்களும் நகரப்பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம் எனவும் தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டார்.

இந்த நிலையில், பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நகரப்பேருந்துகளில் பயணிக்க வழங்க கட்டணமில்லா பேருந்து சீட்டு அச்சிடப்பட்டு, ஏற்கனவே கடந்த மாதம் 21ம் தேதி முதல் திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவரது உதவியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அதைத்தொடர்ந்து, நகரப்பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களுக்கும் இலவச பயண சீட்டு வழங்க போக்குவரத்துத்துறை சார்பில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கும் மகளிர் பயணிகளை முறையாக நடத்த வேண்டும் - ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கு சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிவுரை வழங்கி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

“இலவச பேருந்து பயணம்: மகளிர் பயணிகளை முறையாக நடத்த வேண்டும்”: ஓட்டுநர்கள், நடத்துனர்களுக்கு அறிவுறுத்தல்!

அதில், ”பயணிகள் பேருந்திற்காக நிற்கும்போது பேருந்தை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும்.

ஒரு பயணி நின்றாலும் பேருந்தை நிறுத்தி ஏற்றி செல்ல வேண்டும்.

ஓட்டுநர் பேருந்தை குறித்த இடத்தில்தான் நிறுத்த வேண்டும். பேருந்தை நிறுத்ததிற்கு முன்போ, தாண்டியோ நிறுத்தி பயணிகளுக்கு இடையூறு செய்யக் கூடாது.

நடத்துனர்கள் பெண் பயணிகளிடம் எரிச்சலூட்டும் வகையில் கோபமாகவோ, ஏளனமாகவோ, இழிவாகவோ பேசக்கூடாது.

உபசரிப்புடனும், அன்புடனும் நடந்து கொள்ள வேண்டும்.

நடத்துனர்கள் வேண்டுமென்றே பேருந்தில் இடம் இல்லை என்று கூறி ஏறும் பெண் பயணிகளை இறக்கி விடக்கூடாது.

வயது முதிர்ந்த பெண் பயணிகளுக்கு இருக்கையில் அமர உதவி புரிய வேண்டும்.

பெண் பயணிகள் ஏறும் போதும், இறங்கும் போதும் கண்காணித்து பாதுகாப்பாக இறக்கி விட வேண்டும்” என்பன உள்ளிட்ட அறுவுறுத்தல்கள் அதில் வழங்கப்பட்டுள்ளன.

banner

Related Stories

Related Stories