தமிழ்நாடு

“இது என் ஏரியா.. என்னை கேட்க நீ யார்” : நடுரோட்டில் போலிஸாருக்கு மிரட்டல் விடுத்த இளைஞர் : நடந்தது என்ன ?

சென்னையில் போலிஸாருக்கு மிரட்டல் விடுத்த வாலிபரை போலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

“இது என் ஏரியா.. என்னை கேட்க நீ யார்” : நடுரோட்டில் போலிஸாருக்கு மிரட்டல் விடுத்த இளைஞர் : நடந்தது என்ன ?
user
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை நொளம்பூரை அடுத்த ரெட்டிப்பாளையம் பகுதியில் அரசு ஊழியர் ஒருவர் வீடு கட்டி வருகிறார். இதற்காக வீட்டின் அருகே ஜல்லி, மணல் கொட்டிவைத்துள்ளார். இதையடுத்து சாலையில் மணல் ஜல்லியைக் கொட்டி வைத்தாகக் கூறி வாலிபர் ஒருவர் வீடு கட்டும் உரிமையாளரிடம் தகராறு செய்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து அரசு ஊழியர் நொளம்பூர் காவல்நிலையத்தில், அந்த வாலிபர் மீது புகார் செய்துள்ளார். பின்னர் காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜ் சம்பவ இடத்திற்கு வந்து ஏன் இப்படி தகராறு செய்கிறீர் என்று கேட்டுள்ளார்.

இதற்கு, அந்த வாலிபர், “என் ஊரில் வந்து என்னை கேட்க நீ யார், நீ எந்த ஏரியா” என மிரட்டும் தோணியில் கேட்டுள்ளார். இதை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார். தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து போலிஸாருக்கு மிரட்டல் விடுத்தது சென்னீஸ்குமார் என்பது தெரியவந்து. பிறகு அவரை கைது போலிஸார் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories