தமிழ்நாடு

"கலைஞர், கழகத் தலைவர் எதிர்கொண்ட நெருக்கடியை சார்பட்டாவில் காட்சிப்படுத்தியது சிறப்பு" - உதயநிதி ட்வீட்!

சார்பட்ட பரம்பரை படக்குழுவிற்கு உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

"கலைஞர், கழகத் தலைவர் எதிர்கொண்ட நெருக்கடியை  சார்பட்டாவில் காட்சிப்படுத்தியது சிறப்பு" - உதயநிதி ட்வீட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பா.ரஞ்சித் இயக்தில் உருவான சார்பட்ட பரம்பரை திரைப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகி பாராட்டை பெற்று வருகிறது. மேலும் நடிகர் ஆர்யா, பசுபதி, ஷபீர் கல்லரக்கல், ஆகியோரின் நடிப்பை அனைவரும் விழுந்து புகழ்ந்து வருகிறார்கள்.

இந்நிலையில், தி.மு.க இளைஞரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் சார்பட்ட பரம்பரை படக்குழுவைப் பாராட்டி வாழ்த்தியுள்ளார்.

இது குறித்து உதயநிதி நிதி ஸ்டாலின் தனது ட்விட்டரில், 70-களின் பின்னணியில் குத்துச்சண்டை விளையாட்டை மையப்படுத்தி வெளிவந்துள்ள ’சார்பட்டா பரம்பரை' முக்கியமான திரைப்படம். அந்த காலத்தில் இருந்த அரசியல் நெருக்கடி நிலையையும், அதை கழகம் - கலைஞர் - கழக தலைவர் எதிர்கொண்ட விதத்தையும் கதையோடு காட்சிப்படுத்தியிருப்பது சிறப்புக்குரியது.

கபிலனாக அசத்தியுள்ள நண்பர் ஆர்யாவுக்கும், கழகத்துக்கார்-ரங்கன் வாத்தியாராக நடித்த பசுபதி சாருக்கும் சார், டான்ஸிங் ரோஸ் ஷபீருக்கும், வேம்புலியாக நடித்த ஜான் கொக்கன், ஜான் விஜய் என ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் கதையில் வாழ செய்துள்ள நண்பர் இயக்குநர் பா.ரஞ்சித்துக்கும் ஒட்டுமொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories