தமிழ்நாடு

“கூட்டுறவுத் துறை மூலம் விவசாயிகளுக்கு ரூ.11,500 கோடிக்கு கடன் தர இலக்கு” : அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி !

தமிழகத்தில் கூட்டுறவுத்துறை மூலம் விவசாயிகளுக்கு இந்தாண்டில் ரூ.11,500 கோடிக்கு கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித் துள்ளார்.

“கூட்டுறவுத் துறை மூலம் விவசாயிகளுக்கு ரூ.11,500 கோடிக்கு கடன் தர இலக்கு” : அமைச்சர் ஐ.பெரியசாமி பேட்டி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தேனி மாவட்ட அலுவலக கூடரங்கில், மாநிலத்தில் முதன் முறையாக கூட்டுறவுத் துறை மூலம் விவசாயிகள் குறை தீர்ப்பு கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட ஆட்சியர் முரளிதரன் தலைமை வகித்தார்.

பின்னர் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பேசுகையில், ‘‘தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் இந்தாண்டில் விவசாயிகளுக்கு கடன் வழங்க அதிகபட்சம் ரூ.11,500 கோடிக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரூ.2,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில், தேனி மாவட்டத்திற்கு ரூ.160 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்தமுள்ள 65 லட்சம் விவசாயிகளில் 16 லட்சம் விவசாயிகள் மட்டுமே கூட்டுறவு சங்கங்களில் பதிவு செய்துள்ளனர்.

பாக்கியுள்ள விவசாயிகளையும் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக்க நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோட்டில் கூட்டுறவுத்துறை மூலம் மஞ்சள் கொள் முதல் செய்யப்படுகிறது. தேனி மாவட்டத்தில் தென்னை கொள்முதல் செய்வதற்கு ஆலோசிக்கப்படும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories