தமிழ்நாடு

தேங்காய் குடோனில் கொட்டிக் கிடந்த ஆவணங்கள் - M.R.விஜயபாஸ்கரை கையும் களவுமாக பிடித்த ரெய்டு பின்னணி?

அ.தி.மு.க முன்னாள் விஜயபாஸ்கர் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தேங்காய் குடோனில் கொட்டிக் கிடந்த ஆவணங்கள் -  M.R.விஜயபாஸ்கரை கையும் களவுமாக பிடித்த ரெய்டு பின்னணி?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தவர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர் அமைச்சராக இருந்தபோது தனது துறையில் பல்வேறு முறைகேடு மற்றும் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக ஆட்சியின் போதே குற்றம் சாட்டப்பட்டு, அதுதொடர்பான வழக்கு ஒன்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் எம்.ஆர். விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்கள், வீடு, ஆதரவாளர்கள் வீடுகள் அலுவலகம் என மொத்தம் 26 இடங்களில் நேற்று காலை முதல் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையை நேற்று இரவு வரை நீடித்தது.

கரூரிலுள்ள அவரது வீடு, தொழில் நிறுவனங்கள், அவரின் சகோதரர் வீடு, நிறுவனங்கள் எனச் சுமார் 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை ஏ.டி.எஸ்.பி பவானீஸ்வரி தலைமையில், 20 குழுக்களாகப் பிரிந்து சோதனை மேற்கொண்ட நிலையில், சென்னையிலும் சோதனை நடந்துள்ளது.

முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அவரது பணிக்காலத்தில் அவரது பெயர், அவரது மனைவி விஜயலட்சுமி மற்றும் அவரது தம்பி சேகர் பெயரிலும், விஜயபாஸ்கர் பங்குதாரராக உள்ள நிறுவனங்கள் பெயரிலும் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்துகள் சேர்த்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

தேங்காய் குடோனில் கொட்டிக் கிடந்த ஆவணங்கள் -  M.R.விஜயபாஸ்கரை கையும் களவுமாக பிடித்த ரெய்டு பின்னணி?

இது தொடர்பாக நடந்த சோதனையில், ரூ.25.56 லட்சம் ரொக்கப்பணம், சொத்து சம்பந்தப்பட்ட முக்கிய ஆவணங்கள், காப்பீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடுகள் மற்றும் நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் சத்தமே இல்லாமல் விஜயபாஸ்கர் இரண்டாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் ஊழல் நடந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மேலும் அதிமுக ஆட்சியின் போது வாகனங்களுக்கு பிரதிபலிப்பு ஸ்டிக்கர் ஒப்பந்தத்தில் பல ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலைத் தொடர்ந்து இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதாக போலிஸார் தரப்பில் கூறப்படுகிறது.

பிரதிபலிப்பு ஸ்டிக்கர்களை விற்பனை செய்ய ஒன்றிய அரசு சார்பில் இந்தியாவில் 11 நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியது. அப்போது தமிழ்நாட்டில் 2 நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து டெடி என்ற நிறுவனத்தின் இணையதளம் மூலமாகப் பதிவு செய்து ஸ்டிக்கர் பெற வேண்டும் என்ற நடைமுறையை அப்போதைய அதிமுக அரசு கொண்டு வந்தது.

டெடி என்ற நிறுவனத்திற்கு இந்த ஸ்டிக்கர் அனுமதியை எவ்வித ஒப்பந்தமும் இல்லாமல் அப்போதைய போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கொடுத்துள்ளார்.சாதாரணமாகக் கடையில் வாங்கிக் கொண்டிருந்த ஸ்டிக்கர்களை டெடி நிறுவனத்தின் மூலம் வாங்க வேண்டும் என்பதே ஊழலுக்கான அடிப்படை காரணமாக அமைந்துள்ளது. மேலும் இது தொடர்வாக லாரி உரிமையாளர்களும் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த வழக்கு தற்போது நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

தேங்காய் குடோனில் கொட்டிக் கிடந்த ஆவணங்கள் -  M.R.விஜயபாஸ்கரை கையும் களவுமாக பிடித்த ரெய்டு பின்னணி?

அதேபோல் டெடி நிறுவனத்திற்குக் கொடுக்கப்பட்டதை போன்றே ஜி.எபி.எஸ், வேகக்கட்டுப்பாட்டுக் கருவி விற்பனைகளுக்கும் எவ்விதமான அறிவிப்பும் இல்லாமல் பாந்தன் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. மேலும் உணவு தானியத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட கிருஷ்டி நிறுவனத்தின் கிளை நிறுவனம்தான் இந்த பாந்தன் நிறுவனம்.

இந்நிலையில் தான் எம்.ஆர்.விஜயபாஸ்கரின் தொடர்புடைய இடங்களில் சோதனைகள் நடத்தப்பட்டுள்ளது. மேலும் ரெயின்போ பேக்கேஜிங்க, ரெயின்போ டயர்ஸ், ரெயின்போகலர்ஸ், ரெயின்போ புளுமெட்டல், விஸ்வா எக்ஸ்போர்ட்ஸ் போன்ற பல நிறுவனங்களில் எம்.ஆர். விஜயபாஸ்கர் பங்குதாரராக இருக்கிறார் என்பதும் இந்த சோதனையில் தெரியவந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் விஜய் பேக்கர்ஸ், ரெயின்போ டயர்ஸ், ஸ்ரீ செல்லாண்டியம்மன் டிரான்ஸ்போர்ட் போன்ற நிறுவனங்கள் விஜயபாஸ்கரின் மனைவிக்குச் சொந்தமானது என்ற தகவலும் வெளிவந்துள்ளது. இந்த நிறுவனங்கள் அட்டைப்பெட்டி தயாரிப்பு, சாயப்பட்டரை, டெக்ஸ்ட்டைல்ஸ், டிரான்ஸ்போர், காற்றாலை உள்ளிட்ட துறைசார்ந்த தொழில்களைச் செய்து வருகிறது.

இதனைத் தொடர்ந்து எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரின் உறவினர்கள் அனைவரையும் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலிஸார் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்களும் வெளிவந்துள்ளது.

banner

Related Stories

Related Stories