தமிழ்நாடு

OBC-க்கு சாதிச் சான்றிதழ் வழங்கும் விவகாரம் - ஒன்றிய அரசின் நிலைப்பாட்டுக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு!

இதர பிற்படுத்தப்பட்டோருக்கு சாதிச் சான்றிதழ் வழங்கும்போது வருமானம் பற்றியோ சம்பளம் பற்றியோ கேட்கத் தேவையில்லை என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

OBC-க்கு சாதிச் சான்றிதழ் வழங்கும் விவகாரம் - ஒன்றிய அரசின் நிலைப்பாட்டுக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இதர பிற்படுத்தப்பட்டோருக்கு சாதிச் சான்றிதழ் வழங்கும்போது வருமானம் பற்றியோ சம்பளம் பற்றியோ கேட்கத் தேவையில்லை என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு ஏற்கனவே கூட இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பைச் சேர்ந்தவர்களில் “கிரீமிலேயர்” பிரிவில் சேர்ப்பதற்கு உரியவர்களைத் தீர்மானிக்க அவர்களின் பெற்றோரின் சம்பளத்தையும் உட்படுத்தும் ஒன்றிய அரசின் திட்டத்தை அரசு எதிர்த்துள்ளது.

தற்போது தி.மு.கழக அரசு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளது. அதில் இதர பிற்படுத்தப்பட்டோர் சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்குவதற்கு அவர்களுடைய வேளாண்மை வருமானத்தையோ, அவருடைய குடும்பத்தினரின் சம்பளங்களையோ கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று கேட்கக் கொண்டுள்ளது.

இந்த உத்தரவு மூலம் வேளாண்மை வருமானத்தையும், சம்பளங்களையும் குடும்ப வருமானத்தின் ஒரு பகுதியாகக் கொண்டு இதர பிற்படுத்தப்பட்டோர் சமூகத்தின் கிரீமிலேயரைத் தீர்மானிப்பதற்கு மேற்கொள்ளும் ஒன்றிய அரசிற்கு தன்னுடைய கடுமையான எதிர்ப்பை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

OBC-க்கு சாதிச் சான்றிதழ் வழங்கும் விவகாரம் - ஒன்றிய அரசின் நிலைப்பாட்டுக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு!

இந்தப் புதிய உத்தரவு குறித்து “தி நியூஸ் மினிட்’’ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்தி வருமாறு:

தமிழ்நாடு அரசு ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட இதர பிற்படுத்தப்பட்டோர் சமூகங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் ஒன்றிய அரசு அவர்களில் கிரீமிலேயருக்கு (சமூக ரீதியில் உயர்ந்தவர்கள்) உரியவர்களைக் கண்டறிந்து அவர்களை இட ஒதுக்கீட்டுக்கான பொதுக் கோட்டாவிலிருந்து நீக்குவதற்கான வழிகாட்டி நெறிகளையும் ஒன்றிய அரசு பிறப்பித்துள்ளது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும் கிரீமிலேயரைக் கண்டறிந்து அதில் இடம்பெறும் மக்களை இதர பிற்படுத்தப்பட்டோருக்கான பொதுக் கோட்டாவிலிருந்து விலக்குவதற்கான வழிகாட்டி நெறிகளையும் ஒன்றிய அரசு வெளியிட்டுள்ளது. எனினும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான பொது ஒதுக்கீட்டிலிருந்து கிரீமிலேயர் பிரிவுக்குள் அடங்குவோரைக் கண்டறிவதற்கான நடைமுறையில் மாணவர்களின் பெற்றோர்களின் வருமானம் மாதச் சம்பளம், விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருமானம் ஆகியவற்றைக் கணக்கில் எடுத்துக்கொள்ளக் கூடாது என்று அறிவித்துள்ளது.

தற்போது இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவைச் சேர்ந்த தனி நபர்கள் அரசுப் பணிகள் மற்றும் சேவைகளுக்கும் கல்வி நிறுவனங்களில் சேருவதற்கும் 27சதவிகித இடஒதுக்கீட்டுக்குத் தகுதி உள்ளவர்களாக உள்ளனர். இந்தக் காலியாக உள்ள பணியிடங்கள் நேரடி நியமனங்ள் மூலம் நிரப்பப்படுகின்றன. எனினும் இவர்களில் கிரீமிலேயர் பிரிவில் ஆண்டுக்கு 8 லட்சத்துக்கு மேற்பட்ட வருமானம் உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்குப் பயன்படுத்த இயலாது. இந்த வருமான வரம்பு கிரீமிலேயரை தீர்மானமாகக் கண்டறிந்து அவர்களை ஒதுக்கீட்டிலிருந்து நீக்குவதற்காக ஒன்றிய அரசால் நிறுவப்பட்ட ஓர் அம்சமாகும்.

OBC-க்கு சாதிச் சான்றிதழ் வழங்கும் விவகாரம் - ஒன்றிய அரசின் நிலைப்பாட்டுக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு!

தற்போது உள்ள விதிகளின்படி இதர பிற்படுத்தப்பட்டோர் சமூகக் குடும்பங்களில் ஆண்டுக்கு ரூ.8 லட்சத்துக்கு கீழ் இருப்பவர்கள் ஒதுக்கீடுகளுக்கு தகுதி உள்ளவர்கள் ஆவர். ரூ.8 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்கள் இதரப் பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீடுகளைப் பெற தகுதியற்றவர்கள் ஆவர். இதில் விவசாயத்திலிருந்து கிடைக்கும் வருமானமும் நிலம் வைத்திருப்பதால் கிடைக்கும் வருவாயும் சேர்க்கப்படுவது இல்லை.

இது தவிர, இதர பிற்படுத்தப்பட்டோர் சமூகங்களைச் சேர்ந்தவர்களில் அரசுப் பணிகளிலும் அரசுத் துறை பணிகளிலும் “ஏ” வகுப்பு நிலையில் பதவியில் இருப்பவர்களின் குடும்பங்களும் “கிரீமிலேயர்” பிரிவில் சேர்க்கப்படுவார்கள். இந்த வருமான வரம்பு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிர்ணயிருக்கப்படுகிறது. இது 1993 ஆம் ஆண்டு ரூ.1 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது 2017 ஆம் ஆண்டு ரூ.6 லட்சத்திலிருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டது.

2020 ஆம் ஆண்டு பிப்ரவரியில் ஒன்றிய அரசு கிரிமிலேயரைத் தீர்மானிப்பதற்கான இந்த வருமான வரம்பை 8 லட்சத்திலிருந்து வரி விதிக்கக்கூடிய சம்பளங்கள் உள்பட 12 லட்சமாக உயர்த்த உத்தேசித்திருந்தது என்று அச்சில் இருக்கும் அறிக்கை ஒன்றின் படி தெரியவந்துள்ளது.

கடந்த ஆண்டு பிற்படுத்தப்பட்டோர் நலனுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினரின் கிரீமிலேயருக்கான வருமான வரம்பை ரூ.15 லட்சமாக உயர்த்தப் பரிந்துரை செய்திருந்தது. எனினும் பா.ஜ.க எம்.பி கணேஷ்சிங் தலைமையிலான நாடாளுமன்றக் குழு சம்பளம் மற்றும் வேளாண்மைத் துறை வருமானத்தை வருமானத்திலிருந்து நீக்குவதற்கு பரிந்துரை செய்திருந்தது.

OBC-க்கு சாதிச் சான்றிதழ் வழங்கும் விவகாரம் - ஒன்றிய அரசின் நிலைப்பாட்டுக்கு தமிழ்நாடு அரசு எதிர்ப்பு!
Admin

முந்தைய அ.தி.மு.க அரசும், அதேபோன்று, தற்போதைய தி.மு.க அரசும் “கிரீமிலேயரைப்” பயன்படுத்துவற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 2020 ஜூலை மாதத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில் மு.க.ஸ்டாலின் அவர்கள் பொருளாதார அடிப்படையைக் கையாளுவது ”ஒதுக்கீட்டு உணர்வுக்கு” எதிரானது என்று குறிப்பிட்டிருந்தார். வருமானத்தைக் கணக்கிடாமல் தமிழ்நாட்டில் நிலவி வரும் கொள்கையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருந்தார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் வருமானத்தின் ஒரு பகுதியாக சம்பளத்தைச் சேர்ந்து கிரீமிலேயரைத் தீர்மானிப்பது மூலம் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினரின் சாதித் தடைகளை புறக்கணித்துவிடுகிறது அவை தொடர்ந்து இருந்து வருகின்றன.

விளிம்புநிலை வகுப்புகளிடையே அவை உள்ளன. ஒதுக்கீடுகள் என்பவை பொருளாதார ஏற்றுத் தாழ்வுகளை சரிப்படுத்துவதற்கானவை அல்ல. ஆனால் சமுதாயக் குறைபாடுகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் காரணமாக அவர் பொருளாதார அடிப்படை ஒருபோதும் ஒதுக்கீட்டைப்பற்றி குறிப்பிடும் போது நம்முடைய அரசியலமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை என்று கூறியிருந்தார். இவ்வாறு `தி நியூஸ் மினிட்’ செய்தி வெளியிட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories