தமிழ்நாடு

கடனுக்காக பெற்ற மகனை அடமானம் வைத்த தந்தை.. கண்ணீருடன் தாய் புகார் : பரமக்குடியில் அதிர்ச்சி சம்பவம்!

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் பெற்ற மகனை கடனுக்காக கணவர் அடமானம் வைத்துள்ளதாக மனைவி புகார் அளித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடனுக்காக பெற்ற மகனை அடமானம் வைத்த தந்தை.. கண்ணீருடன் தாய் புகார் : பரமக்குடியில் அதிர்ச்சி சம்பவம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகைக்கடை பஜார் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரமேஷ், சரண்யா தம்பதி. இவர்களுக்கு 13 வயது மகனும் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில், கொரோனா காலத்தில் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால், அதனை சரிசெய்ய பல இடங்களில் கடன் பெற்றுள்ளார் ரமேஷ்.

இந்நிலையில், ரமேஷ் கடன் பிரச்சனையை ஈடுகட்ட தனது மகன் ரூபேஷை கடன் பெற்றவரிடம் ஒப்படைத்து விட்டு, பணம் செலுத்திய பின் தனது மகனை மீட்டுக்கொள்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். ரமேஷ் இதுபோன்று பெற்ற மகனையே அடமானம் வைத்து முதல் முறையல்ல என்றும் இதுதான் அவருக்கு வாடிக்கை எனவும் கடன் கொடுத்தவர்கள் கூறுகின்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த ரமேஷின் மனைவி சரண்யா, பரமக்குடி காவல்நிலையத்திற்குச் சென்று தனது கணவன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் அளித்துள்ளார். ஆனால் புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கக்கோரி அருகில் உள்ள முத்தாளம்மன் கோவில் வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுட்டார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் சரண்யாவை சமாதானம் செய்து வைத்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

banner

Related Stories

Related Stories