தமிழ்நாடு

ஒன்றிய அமைச்சர் நிதியில் கட்டிய பாலம்... 2 வருடத்தில் சேதம்: முறைகேடு நடந்துள்ளதாக மக்கள் குற்றச்சாட்டு!

பொன்.ராதாகிருஷ்ணன் அமைச்சர் நிதியில் கட்டப்பட்ட பாலம் இரண்டே வருடத்தல் இடிந்து சேதம் ஏற்பட்டுள்ளது.

ஒன்றிய அமைச்சர் நிதியில் கட்டிய பாலம்... 2 வருடத்தில் சேதம்: முறைகேடு நடந்துள்ளதாக மக்கள் குற்றச்சாட்டு!
Kalaignar TV
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஒன்றிய அரசு சார்பில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு பாலம் கட்டப்பட்டது. இந்தப் பாலத்தை அப்போதைய ஒன்றிய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் திறந்துவைத்தார்.

இந்நிலையில் பாலத்தின் அடிப்பகுதிகள் திடீரென உடைந்து கீழே விழுந்தது.அப்போது சாலையில் வாகனங்கள் எதுவும் செல்லாததால் எவ்விதமான உயிர் சேதங்களும் ஏற்படவில்லை. பின்னர் இது பற்றி தகவல் அறிந்த நெடுஞ்சாலைத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு நடத்தினர். மேலும் உடைந்த பகுதிகளை நெடுஞ்சாலை துறை ஊழியர்கள் சீரமைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதையடுத்து ரூபாய் 150 கோடி மதிப்பில் கட்டியப் பாலம் இரண்டே ஆண்டுகளில் உடைந்து விழுகிறது. இதனால் பாலத்தின் உறுதி தன்மையில் சந்தேகம் எழுந்துள்ளதாகப் பொதுமக்கள் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்தப் பாலத்தின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும் என்றும், 150 கோடி ரூபாயும் முறையாகச் செலவிடப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories