தமிழ்நாடு

“சத்தமின்றி சமூகப் புரட்சியை ஏற்படுத்தி வரும் மு.க.ஸ்டாலின் ஆட்சி” - மக்கள் கொண்டாடும் முதலமைச்சர்!

‘தமிழ்நாட்டின் விடியல்’ எனப் பொதுமக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைப் பாராட்டி வருகின்றனர்.

“சத்தமின்றி சமூகப் புரட்சியை ஏற்படுத்தி வரும் மு.க.ஸ்டாலின் ஆட்சி” - மக்கள் கொண்டாடும் முதலமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

‘தமிழ்நாட்டின் விடியல்’ எனப் பொதுமக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களைப் பாராட்டி வருகின்றனர். முதலமைச்சரின் சீரிய பணிகள் குறித்து சமூக வலைதளங்களிலும் பெருமிதத்தோடு பகிர்ந்து வருகின்றனர். அந்தவகையில், வாட்ஸ்-அப்பில் வந்த பாராட்டு ஒன்றை முரசொலி நாளேடு வெளியிட்டுள்ளது. அந்தப் பதிவு வருமாறு:

“மேகதாது அணை விவகாரம் குறித்து பிரதமர் மோடியை சந்திக்க தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிக்குழு டெல்லி செல்கிறது” என்ற செய்தி தங்கள் தலைமையிலான அரசு, அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழ்நாட்டின் வாழ்வாதாரப் பிரச்சினையில் எவ்வளவு முதிர்ச்சியோடும், பக்குவத்தோடும் அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து நடவடிக்கைகளை மேற்கொள்கிறது என்பதை நாட்டிற்கு அறிவிக்கிறது.

“நீட் தேர்வு தாக்கம் குறித்து 165 பக்க அறிக்கை முதலமைச்சர் அவர்களிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 86 ஆயிரம் பேரிடமிருந்து கருத்துக்கள் வந்துள்ளன. இதில் நீட் வேண்டாம் என்பதே பெரும்பான்மையினரின் கருத்தாக உள்ளது. நீட் தேர்வு மாணவர்களை எப்படிப் பாதிக்கிறது என அறிக்கையில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது” என்ற அறிவிப்பு தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, கிராமப்புற மாணவர்களின் மருத்துவராகும் கனவில் மண்ணை அள்ளி வீசியுள்ள நீட் தேர்வு நமது கழக அரசின் சமரசமற்ற முயற்சியால் விரைவில் ஒழியும் என்ற பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

நேற்று முன்தினம் நடந்த பொதுப்பணித்துறை ஆய்வுக்கூட்டத்தில், “அரசுப் பள்ளி மற்றும் கல்லூரிக் கட்டிடங்கள், மருத்துவமனைக் கட்டிடங்கள் மற்றும் அரசுத் துறைக் கட்டிடங்களை விரைவாகவும், தரமாகவும் அமைத்திட வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளீர்கள். மேலும், மதுரையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பெயரில் சர்வதேச தரத்திலான பொது நூலகம், சென்னை, கிண்டியிலுள்ள பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை ஆகியவற்றை அமைப்பது குறித்தும் ஆலோசனை வழங்கியுள்ளீர்கள்.

கழக அரசு அமையும்போதெல்லாம் தமிழ்நாட்டின் உட்கட்டமைப்பு வசதிகள் உலகத் தரத்திற்கு உயர்ந்துள்ளது என்ற வரலாற்று உண்மையை இன்றளவும் மெய்ப்பித்து வருகிறீர்கள் முதலமைச்சர் அவர்களே!

தமிழ்நாடு முழுவதும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் ‘பத்திரங்களை பதிவுசெய்ய வரும் பொதுமக்களிடம் சரியான தகவல்களை அளிக்கவேண்டும், மேலும் அவர்களை அதிக நேரம் காத்திருக்க வைக்கக்கூடாது?’ என்று அதிகாரிகளுக்கும், ‘இடைத்தரகர்களை ஒழிக்க பொதுமக்களின் உதவி தேவை. அதிகாரிகள் யாராவது இடைத்தரகர்களை அணுகச் சொன்னால், அரசு வழங்கியுள்ள எண்ணிற்கு உடனடியாக புகார் தெரிவிக்கவேண்டும்’ என்று பொதுமக்களுக்கும் நமது அரசின் அறிவுறுத்தல் மிகுந்த பாராட்டுக்குரியது. ‘வெளிப்படைத்தன்மையும், நேர்மையும் நிறைந்த நிர்வாக அமைப்புதான் ஒரு நல்ல ஆட்சிக்கு அடித்தளம்’ என்பதை உணர்ந்து நம் அரசு செயற்படுவது நாட்டிற்கே முன்மாதிரியாகத் திகழ்கிறது.

குழந்தைகளை அதிகம் பாதிப்படைய செய்யும் நியூமோகோக்கல் நோயிலிருந்து தடுக்கும் பொருட்டு தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ்நியூமோகோக்கல் கான்ஜூகேட் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது மிகுந்த பாராட்டுக்குரியது. மூன்று தவணை நியூமோகோக்கல் கான்ஜூகேட் தடுப்பூசியின் விலை தனியாரில் ரூ.12000 ஆக இருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு இதனை இலவசமாக செலுத்த உள்ளது. இதன் மூலம் ஆண்டுதோறும் 9.23லட்சம் குழந்தைகள் பயன்பெறுவார்கள்.

“சத்தமின்றி சமூகப் புரட்சியை ஏற்படுத்தி வரும் ஆட்சி இது” என்பதற்கான சரித்திர சான்றாகத்தான் எவ்வித ஆர்ப்பாட்டமும் இன்றி இத்தகைய உயர்ந்த திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன. வரலாறு உங்களை வாழ்த்தும் முதலமைச்சர் அவர்களே!

- ஆதவன்

நன்றி: முரசொலி

banner

Related Stories

Related Stories