தமிழ்நாடு

“6 சிறுமிகளுக்கு செல்போனில் ஆபாசப்படத்தை காண்பித்து பாலியல் அத்துமீறல்”: பா.ஜ.க நிர்வாகி போக்சோவில் கைது!

மயிலாடுதுறை அருகே 6 சிறுமிகளுக்கு செல்போனில் ஆபாசப் படத்தை காண்பித்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பா.ஜ.க நிர்வாகியை போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளன.

“6 சிறுமிகளுக்கு செல்போனில் ஆபாசப்படத்தை காண்பித்து பாலியல் அத்துமீறல்”: பா.ஜ.க நிர்வாகி போக்சோவில் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பா.ஜ.க ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. குறிப்பாக பெண்களுக்கு எதிரான குற்றச்செயலில் அதிகம் ஈடுபடுவதே பா.ஜ.கவினர் எனவும் கூறப்படுகிறது.

கடந்த காலங்களில் கூட, உத்திர பிரதேசம் உனா பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு, டெல்லியில் முன்னால் பா.ஜ.க எம்.எல்.ஏ மீது மருமகளே புகார் கொடுத்துள்ள சம்பவம் என பா.ஜ.க-வினர் மீதே பல பாலியல் புகார்கள் குவிந்து கிடக்கின்றது.

ஏன் தமிழகத்திலும் கூட, விழுப்புரம் மாவட்ட பா.ஜ.க தலைவர் வி.ஏ.டி.கலிவரதன் மீது பா.ஜ.கவை சேர்ந்த பெண் நிர்வாகி ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ச்சியாக பல இடங்களில் பல்வேறு பாலியல் புகார்களில் பா.ஜ.கவினர் சிக்கியும், கைதாகியும் வருகின்றனர்.

அந்தவகையில், மயிலாடுதுறை அருகே 6 சிறுமிகளுக்கு செல்போனில் ஆபாசப் படத்தை காண்பித்து பாலியல் சில்மிஷம் செய்த பா.ஜ.க தெற்கு ஒன்றிய பொதுச் செயலாளரை குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் போலிஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மகாலிங்கம்
மகாலிங்கம்

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் காவல் சரகத்திற்கு உட்பட்ட கோழிகுத்தி கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம். பா.ஜ.க தெற்கு ஒன்றிய பொதுச் செயலாளரான இவர், ஒரு கிராமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 மற்றும் 7 வயது சிறுமிகள் உட்பட 6 சிறுமிகளிடம் தனது செல்போனில் உள்ள ஆபாச படங்களை காண்பித்து அதுபோல் தன்னிடம் பாலியல் சில்மிசம் செய்ய வேண்டும் என்று மிரட்டல் விடுத்துள்ளார்.

மேலும், இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலஒ செய்துவிடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனால் அச்சமடைந்த சிறுமி ஒருவர் தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

இதனையடுத்து பெற்றோர் அளித்த புகாரின் பேரில் மகாலிங்கத்தை போலிஸார் கைது செய்தனர். குழந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை மிரட்டல் விடுத்தல், சிறுமிகளின் பாலியல் இச்சையை தூண்டுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளில் மகாலிங்கத்தின் மீது போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories