தமிழ்நாடு

திருமணநாளன்று மணமகனை வெட்டிக் கொன்ற தந்தை...மதுரையில் பரபரப்பு!

மதுரை அருகே திருமணத்தன்று மணமகனைத் தந்தையே வெட்டி கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருமணநாளன்று மணமகனை வெட்டிக் கொன்ற தந்தை...மதுரையில் பரபரப்பு!
Kalaignar TV
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மதுரை மாவட்டம், கவுண்டன் பட்டி பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோவன். இவரது மகன் பிரதீப். இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 18 வயது ஆகாத சொந்தக்கார பெண்ணை அழைத்துச் சென்று திருமணம் செய்துள்ளார். இது பற்றி தகவல் அறிந்த போலிஸார் அவரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

இந்நிலையில் ஜாமீனில் வெளியே வந்த பிரதீப்புக்கும், அந்த பெண்ணுக்கும் இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து வைப்பது என முடிவு செய்து, ஞாயிறன்று திருமணம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, திருமணத்திற்கு முந்தைய நாளான சனிக்கிழமையன்று குடிபோதையிலிருந்த பிரதீப்புக்கும், தந்தை இளங்கோவுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த இளங்கோவன் அங்கிருந்த கோடாரியால் மகன் பிரதீப்பைச் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

பின்னர், இளங்கோவன் நேரடியாகக் காவல்நிலையம் சென்று நடந்த சம்பவத்தைக் கூறி போலிஸாரிடம் சரணடைந்துள்ளார். பின்னர் சம்பவ இடம் பெற்ற போலிஸார் பிரதீப் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணத்திற்கு முந்தைய நாளன்று மகனைத் தந்தையே அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories