தமிழ்நாடு

விபத்தில் சிக்கி எலும்புமுறிவு.. இளைஞருக்கு முதலுதவி சிசிக்சை அளித்த தி.மு.க எம்.எல்.ஏ : மக்கள் பாராட்டு!

விழுப்புரத்தில் விபத்தில் சிக்கியவருக்கு தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் முதலுதவி சிகிச்சை அளித்தார்.

விபத்தில் சிக்கி எலும்புமுறிவு.. இளைஞருக்கு முதலுதவி சிசிக்சை அளித்த தி.மு.க எம்.எல்.ஏ : மக்கள் பாராட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விழுப்புரம் தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின் கீழ் பொதுமக்களிடம் மனுக்கள் வாங்குவதற்கான தனது காரில் இன்று ராகவன்பேட்டை அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது, பனங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ஜெயகுமார் என்ற இளைஞர் விபத்தில் சிக்கி அவரின் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு சாலையின் ஓரமாக இருந்துள்ளார். இதனைப் பார்த்த சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் உடனே தனது காரை நிறுத்தி அவர் அருகே சென்று என்ன ஆனது என்று அங்கிருந்தவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார்.

பிறகு ஜெயகுமாரின் கால் எலும்பு முறிந்ததை அறிந்து உடனடியாக, தனது காரில் இருந்த தி.மு.க கரை வேட்டியைக் கிழித்து, காலில் இருபுறமும் குச்சிகள் வைத்துக் கட்டி முதலுதவி சிகிச்சை அளித்தார். பிறகு விழுப்புரம் அரசு மருத்துவமனைக்குத் தகவல் கொடுத்தார் மருத்துவரான லட்சுமணன் எம்.எல்.ஏ.

விபத்தில் சிக்கி எலும்புமுறிவு.. இளைஞருக்கு முதலுதவி சிசிக்சை அளித்த தி.மு.க எம்.எல்.ஏ : மக்கள் பாராட்டு!

பின்னர், மருத்துவமனையிலிருந்து வந்த ஆம்புலன்ஸில், விபத்தில் சிக்கிய ஜெயகுமாரை ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார். பின்னர் அங்கிருந்து தனது காரில் லட்சுமணன் நிகழ்ச்சிக்கு சென்றார். சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணனின் இந்த செலைப் பார்த்து நெகிழ்ச்சியடைந்த அங்கிருந்த பொதுமக்கள் அவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

விழுப்புரம் தொகுதி தி.மு.க சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் லட்சுமணன், எலும்பு முறிவு மருத்துவராகப் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories