தமிழ்நாடு

“சுகாதார அமைச்சரின் பதவி விலகல் எதைக் காட்டுகிறது?” : ஒன்றிய அரசை கேள்விகளால் துளைத்தெடுத்த ப.சிதம்பரம்!

மத்திய அரசில் சுகாதார அமைச்சராகவும் இணை அமைச்சராகவும் இருந்தவர்கள் பதவி விலகியிருக்கிறார்கள் என்பது எதைக் காட்டுகிறது என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்யுள்ளார்.

“சுகாதார அமைச்சரின் பதவி விலகல் எதைக் காட்டுகிறது?” : ஒன்றிய அரசை கேள்விகளால் துளைத்தெடுத்த ப.சிதம்பரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நாடுமுழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீளாத நிலையில், ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கம் நடைபெற்றுவரும் நிலையில், புதிதாக 42 அமைச்சர்கள் இன்று பதவியேற்றுள்ளனர். முன்னதாக அமைச்சரவையில் இருந்த முக்கிய ஒன்றிய அமைச்சர்களான சஞ்சய் தாத்ரே, ராவ் சாகேப், ரமேஷ் பொக்ரியால் உள்ளிட்ட 12 பேர் பதவி விலகியுள்ளனர்.

இதில், ஒன்றிய சுகாதார அமைச்சர் மற்றும் இணை அமைச்சர் விலகியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், சுகாதார அமைச்சர் மற்றும் இணை அமைச்சர் விலகியிருப்பதை முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

இதுதொடர்பாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மத்திய அரசில் சுகாதார அமைச்சராகவும் இணை அமைச்சராகவும் இருந்தவர்கள் பதவி விலகியிருக்கிறார்கள் என்பது எதைக் காட்டுகிறது?

கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்துவதில் மத்திய அரசு முழுத் தோல்வியை அடைந்திருக்கிறது என்பதையே காட்டுகிறது. ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை, தடுப்பூசி தட்டுப்பாடு இல்லவே இல்லை என்று இவர்கள் நாள்தோறும் ஏன் பறைசாற்றினார்கள் என்ற கேள்வி எழுகிறதல்லவா?” எனப் பதிவிட்டுள்ளார்.

மேலும், கல்வித்துறை அமைச்சர், இணையமைச்சர் விலகலையும் அவர் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள மற்றொரு ட்விட்டர் பதிவில், “கல்வித்துறை அமைச்சர் பதவி விலகுகிறார் என்றால், புதிய கல்விக் கொள்கையின் நிலை என்ன? மாநிலங்களும், அரசியல் கட்சிகளும், கல்வியாளர்களும், அறிஞர்களும் எதிர்க்கட்சி அத்தனை ஆர்ப்பாட்டத்துடன் புதிய கல்விக் கொள்கையை பிரபல்யப்படுத்தினார்களே?! என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், இப்போதுள்ள புதிய கல்விக் கொள்கைக்கு மூடுவிழா செய்துவிட்டு. மாநிலங்களின் உரிமையை மதிக்கும், அறிவியலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும், சுதந்திரமான கலைகளுக்கு முக்கியத்துவம் தரும் கல்விக் கொள்கையை ஊக்குவிப்போம்” என்று வலியுறுத்தியுள்ளார்.

banner

Related Stories

Related Stories