தமிழ்நாடு

முறைகேட்டில் சிக்கிய கூட்டுறவு சங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் - சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை!

முறைகேடுகளில் சிக்கியுள்ள சங்கங்கள் மீது தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கலாம் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முறைகேட்டில் சிக்கிய கூட்டுறவு சங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் - சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழகத்தில் உள்ள கூட்டுறவு சங்கங்களை கலைக்க எதிர்ப்பு தெரிவித்து 30க்கும் மேற்பட்ட கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம் மற்றும் அரசு வழக்கறிஞர் ஆ.செல்வேந்திரன் ஆகியோர் ஆஜராகினர்.

அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் அரசு தரப்பு நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். முறைகேட்டில் ஈடுபட்ட சங்களின் மீது மட்டும் சட்டத்திற்கு உட்பட்டு முறைப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

வழக்கை விசாரித்த நீதிபதி அளித்த உத்தரவு வருமாறு:

”கூட்டுறவு துறை செயலாளர் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் 7,524 கூட்டுறவு சங்கங்கள் உள்ளன. இவற்றில் கடந்த 2018ல் தேர்தல் நடத்தப்பட்ட 291 கூட்டுறவு சங்கங்களில் சுமார் ₹119.62 கோடி முறைகேடு நடந்துள்ளது தெரியவந்துள்ளது. பயிர் கடன்கள் விவசாய நிலங்கள் இல்லாதவர்களுக்கும் தரப்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முறைகேட்டில் சிக்கிய கூட்டுறவு சங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் - சென்னை உயர் நீதிமன்றம் அறிவுரை!

பல்வேறு சங்கங்களில் நிதி மோசடிகள் நடந்துள்ளன. எங்கெல்லாம் முறைகேடுகள் நடந்துள்ளதோ அந்த சங்களில் ஆய்வு நடத்தப்பட்டு சம்மந்தப்பட்ட நிர்வாகிகள் கூட்டுறவு சட்டத்தின் கீழ் நீக்கம் செய்யப்படுவார்கள். தவறு செய்த அதிகாரிகள், ஊழியர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.

அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் வாதிடும்போது, யூகத்தின் அடிப்படையிலேயே இந்த வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. முறைகேடுகள் நடந்துள்ள சங்கங்கள் மீது மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படும் என்று துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

எனவே, முறைகேடுகள் நடந்துள்ள சங்கங்கள் மீது தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கலாம். கூட்டுறவு சங்கங்களில் அன்றாட நடவடிக்கைகளில் இடையூறு ஏற்படுத்துவதாக கூறும் மனுதாரர்கள் அது தொடர்பான ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை.

முறைகேடுகள் நடந்துள்ள சங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு தலைமை வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். அரசின் இந்த உத்தரவாதம் பதிவு செய்யப்பட்டு வழக்கு முடித்து வைக்கப்படுகிறது.”

என தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories