தமிழ்நாடு

"அதிமுக ஆட்சியில் அகற்றப்பட்ட திருக்குறள் மீண்டும் அரசு பேருந்துகளில் இடம்பெறும்" : அமைச்சர் ராஜகண்ணப்பன்

அ.தி.மு.க ஆட்சியின்போது அரசுப் பேருந்துகளில் நீக்கப்பட்டிருந்த திருக்குறள் மீண்டும் அனைத்து பேருந்துகளிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார்.

"அதிமுக ஆட்சியில் அகற்றப்பட்ட திருக்குறள் மீண்டும் அரசு பேருந்துகளில் இடம்பெறும்" : அமைச்சர் ராஜகண்ணப்பன்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில், கொரோனா இரண்டாம் அலை வேகமாகப் பரவியதால் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பின்னர் கொரோனா பரவல் குறையத் தொடங்கியதால் ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஜூலை 12-ம் தேதி காலை 6 மணி வரை தமிழ்நாடு அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே மாதிரியான தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை நீட்டித்துள்ளது. கடந்த ஊரடங்கு தளர்வு அறிவிப்பின்போது 11 மாவட்டங்களில் மட்டுமே பேருந்து சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

தற்போது, அனைத்து மாவட்டத்திற்கும் பேருந்து சேவை இயக்கத்திற்குத் தமிழ்நாடு அரசு அனுமதி வழங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் பேருந்துகள் கொரோனா விதிகளுக்கு உட்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், "தமிழ்நாடு முழுவதும் 702 குளிர்சாதன பேருந்துகள், வெளி மாநிலங்களுக்குச் செல்லும் 1,400 பேருந்துகளைத் தவிர மற்ற பேருந்துகள் அனைத்தும் இயக்கப்படும்.

அதேபோல், மகளிர், திருநங்கையர், மாற்றுத்திறனாளிகள் எத்தனை பேர் பயணிக்கிறார்கள் என தெரிந்து கொள்வதற்காக அவர்களுக்கு கட்டணமில்லா பயணச்சீட்டு வழங்கப்படுகிறது.

அ.தி.மு.க ஆட்சியின்போது அரசு பேருந்துகளில் அகற்றப்பட்டிருந்த திருக்குறள் மீண்டும் அனைத்துப் பேருந்துகளிலும் எழுதும் பணி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்தப் பணி இன்னும் பத்து நாட்களுக்குள் முடிவடையும்.

டீசல் விலை உயரும் நிலையில், மின் வாகனங்களுக்கு மாறுவது சிறந்தது. போக்குவரத்துத் துறையில் இடைத்தரகர்களுக்கு வேலையில்லை; ஊழல் இல்லாமல் பணிகள் நடைபெற்று வருகிறது" எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories