தமிழ்நாடு

"மகனை அமைச்சராக்கவே ஓ.பன்னீர்செல்வம் ஒன்றிய அரசு என கூறுவதை விமர்சிக்கிறார்": டி.கே.எஸ் இளங்கோவன் சாடல்!

தி.மு.க அரசின் மீது பழி போட வேண்டும் என்ற நோக்கில்தான் பாஜக நீட் தேர்வு விவகாரத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது என டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

"மகனை அமைச்சராக்கவே ஓ.பன்னீர்செல்வம் ஒன்றிய அரசு என கூறுவதை விமர்சிக்கிறார்": டி.கே.எஸ் இளங்கோவன் சாடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மகனை அமைச்சராக்கும் நோக்கில்தான் ஒன்றிய அரசு என கூறுவதை ஓ.பன்னீர்செல்வம் விமர்சிப்பதாக தி.மு.க செய்தி தொடர்புச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களைச் சந்தித்த டி.கே.ஸ் இளங்கோவன்,"மகனை அமைச்சராக்கும் நோக்கில்தான் ஒன்றிய அரசு என கூறுவதை ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்து வருகிறார். ஒன்றியம் என்பது ஒற்றுமையைக் குறிக்கும் சொல். அரசியலமைப்புச் சட்டப்படி ஒன்றிய அரசு என கூறுவதில் தவறில்லை.

ஒன்றிய அரசு என்று கூறுவதற்கு ஓபிஎஸ் விமர்சனம் செய்வது பா.ஜ.கவுக்கு ஆதரவாகச் செயல்பட்டு, அவர் மகனை எப்படியாவது மந்திரி ஆக்கிவிட வேண்டும் என்ற நோக்கில் செயல்பட்டு வருகிறார்.

பெட்ரோலுக்கு விலை குறைப்பு, கேஸ் சிலிண்டருக்கு நூறு ரூபாய் விலை குறைப்பு என்ற தி.மு.க தேர்தல் அறிக்கையை விமர்சனம் செய்து வருகின்றனர். விமர்சனம் செய்பவர்களுக்கு அரசாங்கமும் தெரியவில்லை.

தி.மு.க அரசை பொறுத்தவரைத் தேர்தல் அறிக்கையை முழுமையாக நிறைவேற்றும். தி.மு.க அரசின் மீது பழி போட வேண்டும் என்ற நோக்கில்தான் பா.ஜ.க நீட் தேர்வு விவகாரத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. தமிழ்நாட்டிலிருந்து நீட் தேர்வுக்கு முழு விலக்கு பெற்றுத்தர வேண்டும் என்பதே தி.மு.க அரசின் நோக்கம்” என்று தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories