தமிழ்நாடு

குழந்தைகளோடு எலி மருந்து சாப்பிட்டு தாய் தற்கொலை... கடைசியாக எழுதிய கடிதத்தால் அதிர்ச்சி!

திருச்சி அருகே கணவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக, குழந்தைகளுக்கு எலி மருந்து கொடுத்துவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குழந்தைகளோடு எலி மருந்து சாப்பிட்டு தாய் தற்கொலை... கடைசியாக எழுதிய கடிதத்தால் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

திருச்சி மாவட்டம், பொன்னம்பலத்தான்பட்டியைச் சேர்ந்தவர் நித்யா. இவருக்கும் வரதக்கோன்பட்டியைச் சேர்ந்த முருகேசன் என்பவருக்கும் கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக நித்யாவும், முருகேசனும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். இதையடுத்து தனியார் பஞ்சாலையில் வேலைபார்த்து தனது இரண்டு குழந்தைகளையும் நித்யா வளர்த்து வந்தார். இந்நிலையில் கடந்த திங்களன்று பெற்றோருக்குத் தெரியாமல் கணவர் முருகேசனைச் சந்தித்துள்ளார்.

பின்னர் கணவரைச் சந்தித்து வந்ததிலிருந்தே நித்யா மன உளைச்சலில் இருந்துள்ளார். பிறகு வியாழனன்று வேலையை முடித்து விட்டு தனது சகோதரருடன் வீட்டிற்கு வரும்போது, நானும், குழந்தைகளும் எலி மருந்து சாப்பிட்டதாகக் கூறியுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது சகோதரர் உடனே நித்யாவை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். பிறகு இதுகுறித்து வீட்டில் தெரிவித்து குழந்தைகளையும் மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இதையடுத்து மேல் சிகிச்சைக்காக மூன்று பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அடுத்தடுத்து தாய் மற்றும் குழந்தைகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பின்னர் இந்தச் சம்பவம் குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பஞ்சாலையில் விட்டுச் சென்ற நித்யாவின் கைப்பையைச் சோதித்தபோது, போலிஸாருக்கு நித்யா எழுதிய மரண வாக்குமூலக் கடிதம் கிடைத்துள்ளது. அந்தக் கடிதத்தில் எனக்கு நல்ல கணவர் கிடைக்கவில்லை. தனது குழந்தைகளுக்கும் நல்ல தந்தை கிடைக்கவில்லை. எனது மரணத்திற்குக் கணவரும், அவரது சகோதரியும் தான் காரணம். தனது சொத்துகளை ஆதரவற்றோர் இல்லத்திற்கு அளிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து போலிஸார் நித்யாவின் கடிதத்தை ஆதாரமாக வைத்து கணவர் முருகேசன் மற்றும் அவரது சகோதரியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories