தமிழ்நாடு

தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் ATM கொள்ளை: வடமாநில கொள்ளையர்களை பிடிக்க போலிஸார் தீவிர விசாரணை!

புதுச்சேரியிலும், தமிழகத்தை போன்று, போலி ஏடிஎம் கார்டை கொண்டு இரண்டரை லட்சம் பணம் திருட்டு போன சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாட்டைத் தொடர்ந்து புதுச்சேரியிலும் ATM கொள்ளை: வடமாநில கொள்ளையர்களை பிடிக்க போலிஸார் தீவிர விசாரணை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாட்டில் ஏ.டி.எம் வைப்பு இயந்திரத்தில், நூதன முறையில் பல லட்சம் மோசடி செய்தது தெரியவந்து தற்போது அந்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு, பல்வேறு நபர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த 17ம் தேதி இரவு புதுச்சேரி கடலூர் சாலை மணப்பட்டு கிராம சாலையில் உள்ள எஸ்.பி.ஐ வங்கி ஏ.டி.எம்மில், முக கவசம் அணிந்த 3 மர்ம நபர்கள், போலி ஏ.டி.எம் கார்டை பயன்படுத்தி இரண்டு லட்சத்து 60 ஆயிரம் பணத்தை திருடி உள்ளனர்.

தொடர்ந்து அதன் வங்கி மேலாளர் சாந்தி, புதுவை கிருமாம்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில், ஏ.டி.எம்மில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் ஏ.டி.எம்மில் பணம் கொள்ளை அடிக்கப்பட்ட விவகாரம் பெரிய வளையத்திற்குள் சென்ற நிலையில், புதுச்சேரியிலும் அந்த நபர்கள் கைவரிசை காட்டி இருக்கலாம் என்ற கோணத்தில் போலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories