தமிழ்நாடு

இயற்கை பண்ணை, மாடி தோட்டம், உழவர் சந்தை - வேளாண் துறை திட்டங்கள் பற்றி அமைச்சர் MRK பன்னீர்செல்வம் பேட்டி

நகர்ப்புறங்களில் மாடித் தோட்டங்களை உருவாக்க வேளாண்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இயற்கை பண்ணை, மாடி தோட்டம், உழவர் சந்தை - வேளாண் துறை திட்டங்கள் பற்றி அமைச்சர் MRK பன்னீர்செல்வம் பேட்டி
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கிராமப்பகுதிகளில் தோட்டக்கலை விரிவுபடுத்தும் பணி மேம்படுத்தப்படும் வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் உள்ள வேளாண் துறை இயக்குனரக அலுவலகத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சியை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பார்வையிட்டார். வேளாண் துறையில் கண்காட்சி நடத்துவது குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து, தோட்டக்கலை துறையின் அனைத்து மாவட்ட இணை/துணை இயக்குநர்களுடன் ஆய்வு கூட்டத்தில் ஈடுபட்டார். இந்த கண்காட்சி மற்றும் ஆய்வு கூட்டத்தில் வேளாண்துறை செயலாளர் சமயமூர்த்தி, இயக்குநர் அண்ணா துரை, தோட்டக்கலை இயக்குநர் பிருந்தா தேவி, வேளாண் உற்பத்தி ஆணையர் கூடுதல் இணை இயக்குநர்கள், உள்ளிட்ட துறை சார்ந்த அதிகாரிகள் இருந்தனர்.

இயற்கை பண்ணை, மாடி தோட்டம், உழவர் சந்தை - வேளாண் துறை திட்டங்கள் பற்றி அமைச்சர் MRK பன்னீர்செல்வம் பேட்டி

இந்த ஆய்வுக் கூட்டத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையில் மேம்படுத்தப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம், தோட்டக்கலை பயிர்களை ஆண்டுக்கு ஒரு லட்சம் வீதம் அடுத்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் ஹெக்டேர் பரப்பில் அதிகரிக்கப்படும் என்று கூறினார். கொரோனா காலத்தில் காய்கறி மக்களுக்கு எளிமையாக கிடைக்கும் படி எடுத்த முயற்சி உதவியாக இருந்தது.

இயற்கை பண்ணை முறையில் தோட்டக்கலைத் துறையில் பயிர்கள் சாகுபடி மேற்கொள்ளப்படும் என்று கூறிய அவர், கிராமப்புறங்களில் தோட்டக்கலை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் பேசியதாக கூறினார்.

தவிர, வீடுகளிலேயே மாடி தோட்டம் அமைப்பது குறித்து பேசிய அவர், நகர்ப்புறங்களில் மாடித்தோட்டம் அமைப்பது தொடர்பாக துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உழவர் சந்தை மேம்படுத்துவது தொடர்பாகவும் அடுத்த கட்ட ஆய்வு நடத்துகிறோம்.

இயற்கை பண்ணை, மாடி தோட்டம், உழவர் சந்தை - வேளாண் துறை திட்டங்கள் பற்றி அமைச்சர் MRK பன்னீர்செல்வம் பேட்டி

1 லட்சத்து 44 ஆயிரம் ஏக்கர் பரப்பில் 25 கோடி செலவில் தோட்டக்கலை, இயற்கை வேளாண் துறையில் ஊக்குவிக்கும் வகையில் புதிய முயற்சியாக இதனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். உழவர் சந்தைகள் வெற்றிகரமாக செயல்பட வேண்டும் என்றால் கிராமப்புற பகுதிகளில் தோட்டக்கலை உருவாக்கப்பட வேண்டும் அதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இதில் ஆய்வை மேற்கொள்கிறோம்.

நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் போது வேளாண் துறையில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்படும். நிதிநிலை அறிக்கையில் வேண்டியவை குறித்து முதல்வரிடம் தெரிவிக்கப்படும் என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories