சென்னை சேப்பாகத்தில் அனைத்து மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர்களுடன் வேளாண்மை -உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைப்பெற்றது.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் பேசிய வேளாண்மை அமைச்சர் விவசாயிகளுக்கு தேவையான விதைகள் மற்றும் ரசாயன உரங்கள் வழங்கிட வேண்டும் என வோளாண்மை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
மண் வகை பயிர் சாகுபடி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ,10 ஆண்டுகளில் அனைத்து பயிர்களிலும் உற்பத்தி திறன் ,உற்பத்தியில் முதலிடம் பெற திட்டம் தீட்டி செயல்படுத்த வேண்டும்.
அரசின் முக்கிய அறிவிப்பான 60 சதவீத சாகுபடி பரப்பினை 10 ஆண்டுகளில் 75 சதவிகிதமாக மாற்றிட நடப்பு ஆண்டு முதல் உரிய தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
குறிப்பாக குறுவை சாகுபடி திட்டத்தின் வழிகாட்டு முறைகள்படி தேவையான விதைகள்,இரசாயன உரங்கள் வழங்கிட வேண்டும் என வேளாண்மை மற்றும் உழவய் நலத்துறை அமைச்சர் ஆய்வுக்கூடத்தில் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைசெயலாளர் திருசி.சமயமூர்த்தி ,வேளாண்மை இயக்குனர் அண்ணாதுரை, வேளாண்மை கூடுதல் இயக்குனர் அருணா மற்றும் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.








