தமிழ்நாடு

கூட்டாட்சி அரசியலமைப்புக்குள் இருக்கும் இந்தியா ‘ஒன்றிய அரசுதான்’ - இந்து என்.ராம் கருத்து!

முதலமைச்சர் ஒன்றிய அரசு எனக் கூறியது சரிதான் என இந்து என்.ராம் கருத்து தெரிவித்துள்ளார்.

கூட்டாட்சி அரசியலமைப்புக்குள் இருக்கும் இந்தியா ‘ஒன்றிய அரசுதான்’ - இந்து என்.ராம் கருத்து!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று தமிழக சட்டப் பேரவையில், 'ஒன்றிய அரசு' என்று அழைப்பது பற்றி விளக்கமாகப் பேசினார்.

அதை, 'தி இந்து' we will continue to use the term 'union gov', says stalin என்ற தலைப்பில் நேற்று (24.6.2021) செய்தியாக வெளியிட்டிருந்தது.

அது குறித்து 'தி இந்து' குழுமத் தலைவர் 'இந்து' என்.ராம் தமது ட்விட்டர் பக்கத்தில் கீழ்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

'முற்றிலும் சரியானது. பா.ஜ.க. இதை வெளிப்படையாக முதன்மையாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

குடியரசாகவும் கூட்டாட்சி அரசியலமைப்புச் சட்டத்திற்குள்ளும் இருக்கும் இந்தியா, ஒன்றிய அரசுதான் என்பதில் எந்தவிதமான சர்ச்சைக்கும் இடமில்லை.

பாரத் என்று சொல்லப்படும் இந்தியா, ஒன்றிய அரசாகத்தான் இருக்கும். இவ்வாறு தனது ட்விட்டர் பக்கதில் 'இந்து'என். ராம் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories