தமிழ்நாடு

“அ.தி.மு.க நிர்வாகியின் வீட்டில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல்” : 2 பேர் கைது!

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் அ.தி.மு.க ஒன்றிய செயலாளர் மருமகன் வீட்டில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

“அ.தி.மு.க நிர்வாகியின் வீட்டில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான மதுபானங்கள் பறிமுதல்” : 2 பேர் கைது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் உள்ள அ.தி.மு.க மாநில வர்த்தகர் அணி அமைப்பாளர் சஜீவனின் ஆதரவாளராக உள்ள கூடலூர் ஒன்றிய அ.தி.மு.க செயலாளர் பத்மநாதனின் மருமகன் விமல் நாத் அ.தி.மு.கவின் இளைஞரணி அமைப்பாளராக உள்ளார்.

இவர் தனது வீடு மற்றும் தேயிலை தோட்டத்தில் சுமார் 176 லீட்டர் கர்நாடக மாநிலம் மதுபானங்களை கடத்தி வந்து, ஐந்து மடங்கு லாபத்தில் விற்று வந்துள்ளார். இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கூடலூர் காவல் துறையினர் நடத்திய ஆய்வில் அ.தி.மு.க இளைஞரணி அமைப்பாளர் விமல்நாத், அவரது தம்பி புஷ்பா குமார், அருண், பிரபாகரன் ஆகியோர் மது விற்பனை செய்ய வந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் வேலுமணி நெருங்கிய நண்பரான கூடலூர் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க இளைஞர் அணி அமைப்பாளர் விமல்நாத் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்த நிலையில், விமல் நாத் மற்றும் அவரது சகோதரர் தப்பி ஓடினர்.

இந்நிலையில் மது விற்பனை செய்த இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் கோடநாடு கொலை கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட கூடலூர் மர வியாபாரி சஜீவனின் நெருங்கிய நண்பரான விமல்நாத் மற்றும் அவர் சகோதரர் தப்பி ஓடி உள்ளனர்.அவர்களை தனிப்படை அமைத்து போலிஸார் தேடி வருகின்றனர் .

banner

Related Stories

Related Stories