சினிமா

ஈரான் மக்களால் ட்ரெண்ட் ஆகும் விஜய் பாடல்... ட்விட்டரில் வைரலாக்கிய ரசிகர்கள்! (வீடியோ)

ஈரானில் நடிகர் விஜய்யின் போக்கிரி பட பாடலுக்கு மக்கள் நடனமாடிய வீடியோ வைரலாகியுள்ளது.

ஈரான் மக்களால் ட்ரெண்ட் ஆகும் விஜய் பாடல்... ட்விட்டரில் வைரலாக்கிய ரசிகர்கள்! (வீடியோ)
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

விஜய் ரசிகர்கள் அவரது படத்தின் அப்டேட்டோ, விஜய்யின் சமூகம் சார்ந்த பேச்சோ, எதுவாயினும் அதனை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து அதனை உலக அளவில் ட்ரெண்ட் செய்வதில் வல்லவர்கள். அப்படி, விஜய் தொடர்பாக ட்ரெண்ட் ஆன லேட்டஸ்ட் விஷயம் எது தெரியுமா?

உடற்பயிற்சிக்கு முன்னதாக வார்ம் அப் செய்வதற்காக, பலரும் ஏதேனும் பாடலுக்கு நடனமாடுவது வழக்கம். ஈரானில் உள்ள ஜிம்மில் தமிழ் பாடல் ஒன்றுக்கு அங்குள்ளவர்கள் நடனமாடும் காட்சியை விஜய் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

அந்த வீடியோவில், கடந்த 2007ல் வெளியான விஜய்யின் ‘போக்கிரி’ படத்தில் வரும் ‘மாம்பழமாம்... மாம்பழம்’ பாடலுக்கு ஜிம்மில் அவர்கள் நடனமாடியிருக்கிறார்கள். போக்கிரி படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் ஆகியிருந்தாலும் இன்றளவும் அப்படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட் வரிசையில் உள்ளதைக் குறிப்பிட்டு விஜய் ரசிகர்கள் இதைப் பகிர்ந்து வருகிறார்கள்.

இதனையடுத்து, ட்விட்டரில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் தொழிலதிபர் ஆனந்த் மகேந்திராவும் தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்துப் பகிர்ந்துள்ளார். அதில், இனிமேல் நானும் காலையில் தமிழ் பாடல்களை ஒலிக்கச் செய்து புத்துணர்ச்சி பெற இருக்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories