தமிழ்நாடு

“நீட் தேர்வு தொடர்பாக சந்தேகம் வேண்டாம்; முதல்வர் நிச்சயம் விலக்கு பெற்று தருவார்” : அமைச்சர் உறுதி!

நீட் தேர்வு தொடர்பாக சந்தேகம் வேண்டாம் அனிதாவின் பெயரில் 4ஆண்டுகளாக பயிற்சி வகுப்பு நடத்திவரும் முதல்வர் நிச்சயம் விலக்கு பெற்று தருவார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

“நீட் தேர்வு தொடர்பாக சந்தேகம் வேண்டாம்;  முதல்வர் நிச்சயம் விலக்கு பெற்று தருவார்” : அமைச்சர் உறுதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னையில் பருவ மழைக்கு முன்பு, மழைநீர் வடிகால்கள், கழிவு நீர் கால்வாய்கள் தூர்வாரும் பணிகள் துரிதமாக நடைபெற்றுவருகிறது. மழை நீர் வடிகால் தூர்வாரும் பணிகளை சென்னை மாநகராட்சி மேற்கொண்டு வரும் நிலையில், கழிவு நீர் கால்வாய் தூர்வாரும் பணிகளை சென்னை குடிநீர் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் தொடங்கியது.

454 நவீன இயந்திரங்கள் மூலம் 4200கிமீ அளவிலான கழிவு நீர் கால்வாய்கள் தூர்வாரப்படுகின்றன. இன்று தொடங்கி வரும் 30ஆம் தேதி வரை பணிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டையில் கொடியசைத்து பணிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

செய்தியாளர்களை சந்தித்த மைச்சர் மா.சுப்பிரமணியன், “திமுக ஆட்சியின் பொது 1431 கோடி மதிப்பீட்டில் சென்னையில் கழிவுநீர் கால்வாய், மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தொடங்கியது ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அந்த பணிகள் முழுமை பெறவில்லை. தற்போது மீண்டும் கைவிடப்பட்ட பணிகள் தொடங்கும்.

“நீட் தேர்வு தொடர்பாக சந்தேகம் வேண்டாம்;  முதல்வர் நிச்சயம் விலக்கு பெற்று தருவார்” : அமைச்சர் உறுதி!

நீட் தேர்வுக்கு தீர்மானம் மட்டும் தீர்வாகது என்றும் நீட் தேர்வு தொடர்பாக சந்தேகம் கொள்ள தேவையில்லை அனிதா-வின் பெயரால் 4 ஆண்டுகளாக பயிற்சி வகுப்பு நடத்திவரும் முதல்வர் நிச்சயம் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற்றுதருவார் என்றார்.

ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவின் அறிக்கையை தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கையை தொடர்வோம். நீட் பாதிப்பு தொடர்பாக நடிகர் சூர்யாவின் அறிக்கையில் குறிப்பிட்டதை போல் பாதிப்புகளை ஓய்வு பெற்ற நிதியரசர் ஏ.கே.ராஜன் குழுவிற்கு அனுப்பிவையுங்கள். அணிதாவின் தந்தை இது தொடர்பாக அறிக்கை அளித்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories