தமிழ்நாடு

“நீங்கள் எதற்கு; நானே வருகிறேன்” : தொழிலாளர் கோரிக்கையை சங்க அலுவலகத்திற்கே வந்து பெற்றுக்கொண்ட அமைச்சர்!

தொழிலாளர் கோரிக்கைகளை கட்சி அலுவலகத்திற்கே வந்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் பெற்றுக்கொண்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“நீங்கள் எதற்கு; நானே வருகிறேன்” : தொழிலாளர் கோரிக்கையை சங்க அலுவலகத்திற்கே வந்து பெற்றுக்கொண்ட அமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள ஆட்சியில் தமிழ்நாட்டு மக்களின் அனைத்துக் கோரிக்கைகளையும் படிப்படியாக நிறைவேற்றும் பணிகளை அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பட்டா கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு வீடுதேடிச் சென்று பட்டா வழங்குவது, தையல் மெஷின் கேட்ட மாணவிக்கு கல்வி செலவை ஏற்றுக்கொள்ளுதல் முதலிய சீரிய பணிகளை அமைச்சர்கள் செய்து மக்களிடையே பெரும் பாராட்டுகளைப் பெற்று வருகின்றனர்.

அந்தவகையில், தொழிலாளர் கோரிக்கைகளை கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு வந்து தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பெற்றுக்கொண்ட சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

“நீங்கள் எதற்கு; நானே வருகிறேன்” : தொழிலாளர் கோரிக்கையை சங்க அலுவலகத்திற்கே வந்து பெற்றுக்கொண்ட அமைச்சர்!

தமிழ்நாட்டு தொழிலாளர் பிரச்சினைகள் குறித்து, ஏஐடியுசி தலைவர்கள் சந்தித்து முறையீடு செய்வதற்காக நேரம் ஒதுக்கித் தருமாறு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் அவர்களிடம் கேட்கப்பட்டது. ஏஐடியுசி மாநில துணைத் தலைவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளருமான இரா.முத்தரசன் இதுகுறித்து அமைச்சரிடம் தொலைபேசியில் பேசினார்.

அப்போது அமைச்சர் சி.வி.கணேசன், “நீங்கள் எதற்கு வருகிறீர்கள்; 'நானே நேரடியாக வருகிறேன்” என்று கூறி ஒரு மணி நேரத்துக்குள் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில அலுவலகமான 'பாலன் இல்லத்து'க்கு சென்றுள்ளார்.

அங்கு இரா.முத்தரசன் அவர்கள் முன்னிலையில், அவரிடம் ஏஐடியுசி தந்த 16 பக்க கோரிக்கைகளை, வரிவரியாகப் படித்து, அடிக்கோடிட்டு குறிப்புகளும் எழுதியுள்ளார் அமைச்சர் சி.வி.கணேசன்.

“நீங்கள் எதற்கு; நானே வருகிறேன்” : தொழிலாளர் கோரிக்கையை சங்க அலுவலகத்திற்கே வந்து பெற்றுக்கொண்ட அமைச்சர்!

மேலும், ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தமிழ்நாட்டில் தொழிலாளர் நிலை, தொழிலுறவு நிலை, தொழிலாளர் துறையின் செயல்பாடு, நலவாரியங்களின் செயல்பாடு ஆகியவை பற்றி மனந்திறந்து விவாதிக்க வாய்ப்பு தந்தார்.

தொழிலாளர்களின் கோரிக்கைகளைப் பெற, சங்க அலுவலகத்துக்கு ஒரு அமைச்சர் வந்ததும், விவாதித்ததும், இதுவரை கண்டிராத வியப்புக்குரிய அணுகுமுறையாகும். கடந்த பத்து ஆண்டுகளாக பெரிதும் சீர்குலைக்கப்பட்டு விட்ட தொழிலாளர் துறையை புனரமைக்க, அமைச்சரின் அக்கறை தோய்ந்த இந்த அணுகுமுறை பெரிதும் உதவும் என தொழிற்சங்க தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.

மேலும் இந்த சந்திப்பின்போது, தமிழ்நாடு ஏஐடியுசி சார்பில் பொதுச் செயலாளர் டி.எம்.மூர்த்தி, துணைப் பொதுச் செயலாளர் கே.இரவி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களான செயலாளர் நா.பெரியசாமி, துணைத் தலைவர் ஏ. எஸ். கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்.

banner

Related Stories

Related Stories