தமிழ்நாடு

“சிறப்பான செய்தி”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணர் பாராட்டு!

5 பேர் கொண்ட பொருளாதார ஆலோசனைக் குழு அமைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணர் கவுஷிக் பாசு பாராட்டு தெரிவித்துள்ளார்.

“சிறப்பான செய்தி”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணர் பாராட்டு!
Vignesh
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ஆளுநர் உரையின் முக்கிய அம்சமாக நோபல் பரிசுபெற்ற நிபுணர், ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் உள்ளிட்ட 5 பேர் அடங்கிய பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்படும் என்கிற அறிவிப்பு பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளுநர் உரையை வாசித்தார். ஆளுநர் உரையில் இடம்பெற்ற பொருளாதார ஆலோசனைகு குழு பற்றிய அறிவிப்பு அனைவரையும் கவர்ந்தது.

இதுகுறித்து ஆளுநர் உரையில், “வரும் சில ஆண்டுகளுக்கு மட்டும் கிடைக்கக்கூடிய மனித வளத்தின் பலன்களை முழுமையாகப் பயன்படுத்தி விரைவான பொருளாதார வளர்ச்சி பெற முற்படுவோம். இந்த வளர்ச்சி இலக்குகளை எட்டுவதற்கான பாதை அமைத்து தமிழக முதலமைச்சருக்கு ஆலோசனை கூற பொருளாதார ஆலோசனைக் குழு ஒன்றை அமைக்க இந்த அரசு முடிவெடுத்துள்ளது.

இக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் மாநிலத்தின் பொருளாதாரத்தை மீண்டும் எழுச்சிபெறச் செய்து பொருளாதாரத்தின் பயன்களை அனைவரும் பெற இந்த அரசு உறுதி செய்யும்.

1. இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன்,

2. நோபல் பரிசுபெற்ற அமெரிக்கப் பொருளாதார நிபுணர் எஸ்தர் டஃப்ளோ,

3. மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்,

4. ராஞ்சி பல்கலைக்கழக டெல்லி ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் ஜீன் ட்ரெஸ்,

5. மத்திய அரசின் முன்னாள் நிதித்துறைச் செயலர் நாராயணன் ஆகிய ஐவர் இந்தக் குழுவில் இருப்பர்.

இவர்கள் பணிப் பொருளாதார நிலையை ஆராய்ந்து, பொருளாதாரத்தை மேம்படுத்த முதல்வருக்கு ஆலோசனைகளை அளிப்பார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு பொருளாதாரக் கண்ணோட்டத்தில் மிக முக்கியமான அறிவிப்பாகப் பார்க்கப்படுகிறது. அரசியல் தலைவர்களும், பொருளாதார அறிஞர்களும், தமிழ்நாடு அரசின் இம்முயற்சியை வரவேற்றுள்ளனர்.

உலக வங்கியின் முன்னாள் தலைமை பொருளாதார நிபுணர் கவுஷிக் பாசு, தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பை வரவேற்றுள்ளார்.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள கவுஷிக் பாசு, “இது சிறப்பான செய்தி. தமிழ்நாடு முதலமைச்சருக்கு வாழ்த்துகள். அகில இந்திய கொள்கை வகுப்பிலும் இந்த நபர்களின் கருத்துகள் இருந்தால், இந்தியாவின் பொருளாதாரம் எட்டிய உச்சத்திற்கு மீண்டும் திரும்பும்” எனத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஒன்றிய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம், “தமிழ்நாடு அரசு ஒரு பொருளாதார ஆலோசனைக் குழுவை அமைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கும் செய்தி. இந்தக் குழுவில் உள்ள பொருளாதார வல்லுனர்கள் உலகப் புகழ் பெற்றவர்கள். இந்தக் குழுவை அமைத்தது சிறந்த நடவடிக்கை. இதை நான் பாராட்டி வரவேற்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories