தமிழ்நாடு

அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்ன பதில் : ‘தங்கமணி மீதான ஊழல் புகாரில் நடவடிக்கை’.. விரைவில் கைது?

சென்னை அண்ணா சாலையில் புதிதாக அமைக்கப்பட்ட மின் நுகர்வோர் சேவை மையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்ன பதில் : ‘தங்கமணி மீதான ஊழல் புகாரில் நடவடிக்கை’.. விரைவில் கைது?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சென்னை அண்ணா சாலையில் உள்ள மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைமை அலுவலகத்தில் மின் சேவை நுகர்வோர் மையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது:-

9498794987 என்ற எண்ணில் நுகர்வோர் சேவை மையத்தை தொடர்புகொண்டு மின் துண்டிப்பு உள்ளிட்டவை குறித்து மக்கள் புகார் அளிக்கலாம். மின்சார துறை சார்ந்த அனைத்து வகை புகாரினையும் நுகர்வோர் இந்த சேவையில் தெரிவிக்கலாம்.

1912 என்ற பழைய எண்ணிற்கு வரும் அழைப்புகளும் இந்த எண்ணிற்கு வரும் படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. புகார் தெரிவிக்கும் நுகர்வோருக்கு SMS அனுப்பப்படும். புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் அவர்களுக்கு SMS அனுப்பப்படும்.

மின்மிகை மாநிலம் என முன்னாள் அமைச்சர் கூறுகிறார். ஆனால் முறையாக 9 மாத காலம் பராமரிப்பு பணிகள் ஏதும் செய்யப்படாததால் மின் வெட்டு ஏற்படுகிறது. இதனை முன்னாள் மின்துறை அமைச்சர் தங்கமணி ஒப்புக்கொள்ள வேண்டும். பராமரிப்பு பணிகள் ஏன் நடைபெறவில்லை என முன்னாள் அமைச்சர் விளக்க வேண்டும்.

மின்வாரியம் அதிக கடன் சுமையில் உள்ளது. அதனை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முன்னாள் அமைச்சர் தங்கமணி மீதான முறைகேடு புகார்கள், அதன் முகாந்திரங்கள் குறித்து சட்டமன்ற கூட்டத்தொடரில் தெரிவிக்கப்படும்.

banner

Related Stories

Related Stories