தமிழ்நாடு

காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞருக்கு சென்னை ஐகோர்ட் முன் ஜாமீன் மறுப்பு!

காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞருக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம் அவரது மகளுக்கு மட்டும் நிபந்தனை முன்ஜாமீன் வழங்கியுள்ளது.

காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞருக்கு சென்னை ஐகோர்ட் முன் ஜாமீன் மறுப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் வழக்கறிஞருக்கு முன் ஜாமீன் வழங்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றம் அவரது மகளுக்கு மட்டும் நிபந்தனை முன்ஜாமின் வழங்கியுள்ளது.

சென்னை சேத்துப்பட்டு சிக்னலில் காவலர்களுடன், வழக்கறிஞர் தனுஜா ராஜன் மற்றும் அவரது மகளும் சட்டக்கல்லூரி மாணவியுமான ப்ரீத்தி ஆகியோர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

இதனையடுத்து தலைமைக் காவலர் ரஜித் குமார் அளித்த புகாரின் பேரில் சேத்துப்பட்டு போலீசார் 6 பிரிவுகளின் கீழ் இருவர் மீதும் வழக்குபதிவு செய்தனர். இந்நிலையில், தாய் தனுஜா, மகள் ப்ரீத்தி இருவரும் முன் ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் அவர்கள் இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தண்டபாணி, வரம்பு மீறிய வழக்கறிஞர்கள் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டிருந்தார்.

பார் கவுன்சில் சார்பில் வழக்கறிஞர் ஹாஜா மொய்தீன் கிஸ்தி அறிக்கை தாக்கல் செய்தார். வழக்கை விசாரித்த நீதிபதி புகார்கள் இல்லாமல் தானாக முன்வந்து தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா என கேள்வி எழுப்பியிருந்தார்.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பெண் வழக்கறிஞர் தனுஜாவின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி தண்டபாணி, அவரது மகள் ப்ரீத்திக்கு மட்டும் நிபந்தனை முன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும் தவறு செய்யக்கூடிய வழக்கறிஞர் மீது பார் கவுன்சில் தானாக முன்வந்து நடவடிக்கை எடுப்பது தொடர்பாக விதிகளை கொண்டுவரவேண்டும் என்றும் பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பாக வாட்ஸ் அப்பில்அவதூறாக கருத்து தெரிவித்த வழக்கறிஞர் ஆர்.கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ள நீதிபதி இது குறித்து நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories